- Advertisement -
உலக கிரிக்கெட்

ராகுல் டிராவிடை பின்னுக்கு தள்ளி டெஸ்ட் போட்டிகளில் மாபெரும் சாதனை நிகழ்த்திய ஸ்டீவ் ஸ்மித் – விவரம் இதோ

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியானது மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்த தொடரை ஏற்கனவே மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

ராகுல் டிராவிடை பின்னுக்கு தள்ளிய ஸ்டீவ் ஸ்மித் :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 25-ஆம் தேதி மெல்போன் நகரில் பாக்சிங் டே போட்டியாக துவங்கியது. அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை நோக்கி பயணித்து வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக 42 ரன்கள் முன்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 132 ரன்களை மட்டுமே குவித்தது.

அதன் காரணமாக தற்போது 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய அணி சார்பாக விளையாடி வரும் அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ராகுல் டிராவிடின் சாதனை ஒன்றினை முறியடித்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிடை(210) பின்னுக்கு தள்ளி தற்போது ஸ்டீவ் ஸ்மித் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : 77 வெற்றிகள்.. ஆஸியின் லென்னிங்கை முந்திய இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத்.. புதிய 2 உலக சாதனை

இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் இன்னிங்சில் அவர் பிடித்த 2 கேட்ச்களுடன் சேர்த்து டெஸ்ட் போட்டிகளில் 212 கேட்ச்களுடன் அவர் இரண்டாவது இன்னத்திற்கு முன்னேறியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச்களை பிடித்த வீரராக ஜோ ரூட் (214) கேட்ச்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -