- Advertisement -
இந்திய கிரிக்கெட்

100 சதம் அடிக்கா விட்டாலும் சச்சினை விட விராட் கோலி சிறந்தவர்.. காரணம் இதான்.. ஹார்மிசன் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஒருநாள் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதனால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 2027 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. சொல்லப்போனால் டெஸ்ட், டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்ட அவர்கள் விரைவில் ஒருநாள் போட்டிகளிலும் விடை பெற உள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன.

முன்னதாக 2008 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்ற விராட் கோலி இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போதிலிருந்து 17 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ள அவர் 27000+ ரன்கள் அடித்துள்ளார். மேலும் 82 சதங்கள் அடித்துள்ள அவர் ஒரு கட்டத்தில் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை எளிதாக முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

100 சதங்கள் அடிக்காவிட்டாலும்:

இருப்பினும் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாட உள்ள அவர் அந்த சாதனையை உடைப்பதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. அதனால் என்றுமே 100 சதங்கள் அடித்த சச்சின் மட்டுமே உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கருத்துக்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் தம்மைப் பொறுத்த வரை சச்சினை விட விராட் கோலி சிறந்த வீரர் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டீவ் ஹார்மிசன் கூறியுள்ளார்.

ஏனெனில் தனது கடைசி டெஸ்ட் போட்டியை சொந்த மண்ணில் விளையாடி ஓய்வு பெறும் வரை சச்சினுக்கு பிசிசிஐ ஆதரவு கொடுத்தது. ஆனால் தற்போதைய பிசிசிஐ விராட் கோலிக்கு போதுமான ஆதரவு கொடுக்கவில்லை என்று அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார். சொல்லப்போனால் விராட் கோலி களத்திற்கு வெளியே நிறைய அரசியல் மற்றும் எதிர்ப்புகளை எதிர்கொண்டு இந்தளவுக்கு அசத்தியுள்ளதாகவும் ஹர்மிசன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

விராட் கோலி பெஸ்ட்:

இது பற்றி டால்க்ஸ்போர்ட் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சச்சின் டெண்டுல்கருக்கு மேலே விராட் கோலியை நான் நம்பர் ஒன் இடத்தில் போடுவேன். இது பலருடைய கண் புருவங்களை உயர்த்தலாம். ஆனால் விராட் கோலி தன்னுடைய கேரியரில் கடந்த 10 வருடங்களில் விளையாடிய விதத்தை சிந்திக்கிறேன். களத்திற்கு வெளியே அவர் எதிர்கொண்ட நிறைய நரகத்தனமான விஷயங்கள் களத்தில் அவருடைய செயல்பாடுகளை பாதித்திருக்கக்கூடும்”

இதையும் படிங்க: புஜாரா போனப்போ நானும் மிஸ் பண்ணேன்.. ஜடேஜாவின் பாசம் விக்கெட்டில் தெரியாது.. அஸ்வின் பேட்டி

“எனவே கடந்த 20 – 30 வருடங்களில் விளையாடிய வீரர்களில் விராட் கோலி கிரேட்டஸ்ட் கிரிக்கெட்டர் என்று நினைக்கிறேன். நீங்கள் ஷேன் வார்னேவை தவிர்க்கலாம். ஏனெனில் அவர் கொஞ்சம் முன்னதாகவே விளையாட வந்து விட்டார். எனவே விராட் கோலி சிறந்த கிரிக்கெட்டர்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து விராட் கோலி ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் விளையாட உள்ளார்.

- Advertisement -