புஜாரா போனப்போ நானும் மிஸ் பண்ணேன்.. ஜடேஜாவின் பாசம் விக்கெட்டில் தெரியாது.. அஸ்வின் பேட்டி

R Ashwin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா எளிதாக வென்றது. அந்த வெற்றிக்கு 104* ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் எடுத்து ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றிய ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

அப்போட்டியின் முடிவில் தம்முடைய பவுலிங் பார்ட்னர் ரவிச்சந்திரன் அஸ்வினை மிஸ் செய்வதாக ஜடேஜா கூறினார். குறிப்பாக 12 வருடத்திற்கும் மேலாக ஒன்றாக விளையாடிய அஸ்வின் தமக்கு அடுத்ததாக ஓவர் போட வருவார் என்று தமக்குள் தோன்றுமென ஜடேஜா தெரிவித்தார். அப்போது அஸ்வின் ஓய்வு பெற்ற விட்டதால் இனிமேலும் பந்து வீச வரமாட்டார் என்பதை உணர்வேன் என்றும் ஜடேஜா தெரிவித்தது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

- Advertisement -

ஜடேஜாவின் பாசம்:

இந்நிலையில் தம்முடைய ஓய்வால் ரவீந்திர ஜடேஜாவுக்கு அதிக விக்கெட்டுகள் கிடைக்கும் என்பதால் தம்மை மிஸ் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கலகலப்பாக தெரிவித்துள்ளார். அதே சமயம் தாமும் ஜடேஜாவை மிஸ் செய்வதாக தெரிவிக்கும் அஸ்வின் விரைவில் அவரை சந்தித்து பேச உள்ளதாக கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“ஜடேஜா எடுத்த விக்கெட்டுகளில் 2 – 3 நான் எடுத்திருப்பேன். எனவே நான் இல்லாததால் கிடைக்கும் சாதகத்தை வைத்து ஜடேஜா என்னை மிஸ் செய்யக்கூடாது (புன்னகைக்கிறார்). உண்மையில் ஜடேஜாவுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். பேட்டிங் செய்யும் விதத்தை வைத்து அவர் டெஸ்ட் கிரிக்கெட்டின் சான்றிதழ் பெற்ற ஜாம்பவானாகி வருகிறார். அவருடைய கருத்தைக் கேட்ட பின் என் மேலே பாசத்தை அவர் காண்பிக்கிறார் என்பது எனக்குத் தெரியும்”

- Advertisement -

அஸ்வின் நெகிழ்ச்சி:

“அனைத்தையும் தாண்டி தற்போதைய இந்திய அணியில் அவர் மனம் விட்டு பேச நிறைய இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அனைவரும் புதிய பையன்களாக உள்ளனர். சீனியர் வீரர்கள் என்ற இடத்தை அடைந்ததும் நீங்கள் புதிய பையன்களிடம் கொஞ்சம் சிந்தித்துப் பேச வேண்டும். இதை சொன்னால் இந்தப் பையன் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? என்ற எண்ணங்கள் தோன்றும்”

இதையும் படிங்க: விராட், ரோஹித் இந்தியாவை பயமற்ற அணியாக மாத்துனாங்க.. தெ.ஆ பிட்ச் பாத்து ஆச்சர்யப்படாது.. பவுமா பேட்டி

“புஜாரா அணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் எனக்கும் ஜடேஜாவுக்கு வந்ததைப் போன்ற உணர்வு தோன்றியது. ஒன்றாக அமர்ந்து பேசக்கூடிய நபர் ஓய்வு பெற்றால் அவரை நீங்கள் மிஸ் செய்வீர்கள். அந்த வகையில் ஜடேஜா என்ன சொல்கிறார் என்பது எனக்குத் தெரிகிறது. நாங்கள் விரைவில் சந்தித்து நீண்ட நேரம் பேசுவோம்” என்று கூறினார்.

Advertisement