இந்த வருஷம் இப்படி மோசமா தோத்து வெளியேபோனதும் நல்லதுதான். ஏன் தெரியுமா? – கோச் பிளமிங் பேட்டி

Fleming
- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 14-வது ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு சென்று இறுதிப்போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்திய சென்னை அணியானது சாம்பியன் பட்டத்தை வென்றது. இப்படி கடந்த வருடம் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி நடப்பு சாம்பியனாக இந்த ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் தேதி துவங்கிய பதினைந்தாவது ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டது. இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் ஜடேஜா புதிய கேப்டனாக பதவி ஏற்றார்.

CSK Ms DHoni

அவரது தலைமையில் இந்த ஆண்டும் சிஎஸ்கே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று அனைவரும் எதிர் பார்த்தார்கள். ஆனால் முதல் 8 போட்டிகளில் விளையாடிய சென்னை அணியானது இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றதால் பிளே ஆப் வாய்ப்பு மங்கியது. அப்போது கேப்டன்சி அழுத்தத்தை தன்னால் தாங்க முடியவில்லை என்று மீண்டும் கேப்டன் பதவியை தோனியிடமே ஜடேஜா வழங்கினார். அதனை தொடர்ந்து தோனியின் தலைமையில் எஞ்சியுள்ள தொடரை தற்போது முடித்துள்ள சென்னை அணியானது 14 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாம் இடம் பிடித்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது.

- Advertisement -

கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணியானது இந்த ஆண்டு 9வது இடத்தை பிடித்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் சென்னை அணியின் கேப்டன் தோனி அடுத்த ஆண்டு நான் விளையாடுவேன் நிச்சயம் மீண்டும் பலமான கம்பேக் கொடுப்போம் என்று உறுதியளித்து உள்ளதால் அடுத்த ஆண்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை சிஎஸ்கே வெளிப்படுத்தும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் மோசமான செயல்பாடு குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

CSK MS Dhoni Ravindra Jadeja

இந்த ஆண்டு சிஎஸ்கே அணி மோசமாக செயல்பட்டது உண்மைதான். ஆனால் அடுத்த பல ஆண்டுகளுக்கான அணியை நாங்கள் இந்த ஆண்டு கட்டமைத்துள்ளோம். இவ்வாறு புதிய அணியை கட்டமைக்கும் போது ஏற்படும் சரிவு என்பது நிகழக் கூடிய ஒன்றுதான். அந்த வகையில் இந்த ஆண்டு அணியில் உள்ள சில வீரர்களுக்கு புதிதாக வாய்ப்பும் வழங்கி அவர்களுடைய திறனையும் பரிசோதித்துள்ளோம். இதை வைத்து அடுத்த ஆண்டு தொடரில் எங்களால் சரியான அணியுடன் களமிறங்க முடியும்.

- Advertisement -

நிச்சயம் அடுத்த வருடம் சிறப்பான அணியுடன் களம் இறங்குவோம் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : எப்பொழுதுமே ஒரு புதிய அணியை நாம் உருவாக்கும் போது சில வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அந்த வகையில் இம்முறை சில வீரர்கள் பரிசோதித்து இந்த ஆண்டு எங்களுக்கு சரிவு ஏற்பட்டாலும் அடுத்த பல ஆண்டுகளுக்கு நாங்கள் பலமான அணியாக மற்ற அணிகளுக்கு திகழ்வோம்.

இதையும் படிங்க : மும்பை அணிக்கெதிராக நாங்க இப்படி தோக்க இதுவே காரணம் – டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் வருத்தம்

அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் இரண்டு வீரர்கள் கூட ஃபார்மில் இல்லை. ஆனாலும் இரண்டு வெற்றிகளை பெற்ற பின்னர் அணி மீண்டும் சரியான பாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்த்தோம். அப்போதும் எங்களால் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. நிச்சயம் அடுத்த ஆண்டு பலமாக திரும்புவோம் எனவே இந்த ஆண்டு ஏற்பட்ட சரிவும் நல்லதுக்குத்தான் என பிளமிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement