மும்பை அணிக்கெதிராக நாங்க இப்படி தோக்க இதுவே காரணம் – டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் வருத்தம்

Pant
Advertisement

நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கான போட்டிகள் இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெற உள்ள வேளையில் முதல் மூன்று அணிகளாக குஜராத், ராஜஸ்தான் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பை உறுதி செய்தன. அதனைத்தொடர்ந்து நேற்றைய போட்டியில் மும்பை அணியை எதிர்த்து விளையாடிய டெல்லி அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்ற கட்டாயத்தில் விளையாடியது.

Rovman Powell Jasprit Bumrah

இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை குவித்தது. பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது இஷான் கிஷன்(48), ப்ரேவிஸ்(37), திலக் வர்மா(21), டிம் டேவிட்(34), ரமன் தீப் சிங்(13) ஆகியோரது சிறப்பான பங்களிப்பு காரணமாக 19.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

- Advertisement -

மும்பை அணி பெற்ற இந்த வெற்றியால் டெல்லி அணி இந்த தொடரில் இருந்து வெளியேறியது. அதனால் பெங்களூரு அணி நான்காவது இடத்தில் பிளே ஆப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது. எப்படியும் இந்த போட்டியில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு நுழையலாம் என்று எதிர்பார்த்த டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டிற்கு இந்த தோல்வி மிகவும் வருத்தமாக அமைந்தது.

powell 2

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பண்ட் கூறுகையில் : நிறைய போட்டிகளில் நாங்கள் டாப்பில் தான் இருந்தோம். ஆனால் அப்படி நாங்கள் முன்னிலையில் இருந்தாலும் முக்கியமான நேரத்தில் ஏற்பட்ட சரிவு காரணமாக பல போட்டிகளை தவற விட்டோம். அதன் காரணமாகவே இந்த தொடர் முழுவதும் நாங்கள் சற்று கஷ்டப்பட்டு வந்தோம்.

- Advertisement -

நாங்கள் இன்னும் நிறைய போட்டிகளில் ஜெயித்திருக்க வேண்டும். ஆனால் எங்களால் சரியான திட்டம் மற்றும் எக்ஸிகியூஷன் இல்லாமல் அதனை தவறவிட்டு உள்ளோம். நிச்சயம் இந்த ஆண்டு செய்த தவறுகளிலிருந்து சில பாடங்களை கற்றுக் கொண்டு அடுத்த ஆண்டு பலமாக திரும்ப வருவோம்.

இதையும் படிங்க : மிரட்டல் பவுலிங், மின்னல்வேக சேசிங் ! ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக சேசிங் செய்யப்பட்ட டாப் 5 போட்டிகள்

இந்த போட்டியில் 5 முதல் 7 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டோம். பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும் கடைசி நேரத்தில் பனியின் தாக்கம் காரணமாக பந்துவீச்சில் எங்கள் திட்டங்கள் தவறியது. இது போன்ற தோல்விகளை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என பண்ட் வருத்தத்துடன் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement