மிரட்டல் பவுலிங், மின்னல்வேக சேசிங் ! ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக சேசிங் செய்யப்பட்ட டாப் 5 போட்டிகள்

Mumbai Indians MI 2013
- Advertisement -

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் எப்போதுமே வெற்றிக்காக ஒரு போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளுமே சரிசமமான திறமையை வெளிப்படுத்தி சம அளவில் போராடுவதை பார்க்க முடியும். பெரும்பாலான போட்டிகளில் இரு அணிகளும் வெற்றிக்காக அனல் பறக்கும் வகையில் மோதிக் கொள்வதால் வெற்றி என்பது கடைசி ஓவரில் தான் தீர்மானிக்கப் படுகிறது. இருப்பினும் எப்போதாவது ஒரு சில போட்டிகளில் ஏதோ ஒரு அணியின் கை மட்டும் ஏடாகூடமாக ஓங்கி எதிரணியை அடிபணியச் செய்து எளிதான வெற்றியை சுவைத்து விடும்.

IPL 2022 (2)

- Advertisement -

அதிலும் முதலில் பேட்டிங் செய்யும் அணியை தரமான அதிரடியான பேட்ஸ்மேன்களை கொண்டிருந்தாலும் பந்து வீசும் அணியின் பவுலர்கள் பேட்ஸ்மேன்களை ஆதிக்கம் செலுத்த விடாமல் மிரட்டலாக பந்துவீசி ஆரம்பத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை காலி செய்து அதன்பின் பெரிய அளவில் ரன்களை எடுக்க விடாமல் மடக்கி பிடித்து விடுவார்கள்.

அதனால் குறைவான ரன்களுக்கு அல்லது மொத்தமாக ஆல் அவுட்டாகும் அணியினர் அப்போதே மனதளவில் வெற்றியை விட்டுவிடுவார்கள். அதன்பின் அந்த குறைவான இலக்கை அடுத்ததாக சேசிங் செய்யும் அணி பேட்ஸ்மேன்கல் கொஞ்சம் கூட கருணை காட்டாமல் அதிரடி சரவெடியான பவுண்டரிகளை பறக்க விட்டு மின்னல் வேகத்தில் சேசிங் செய்து மிரட்டலான வெற்றியை பெற்றுக் கொடுப்பார்கள். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் முதலில் அற்புதமாக பந்துவீசி பின்னர் அதிவேகமாக சேசிங் செய்யப்பட்ட டாப் 5 போட்டிகளைப் பற்றி பார்ப்போம்.

mi 1

5. மும்பை (8.2): 2021 ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய ரோஹித் சர்மா தலைமையிலான மும்பைக்கு எதிராக ஷார்ஜாவில் நடந்த 51-வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அந்த அணியின் அதிரடியான வேகப்பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 90/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதில் நேதன் கோல்டர் நைல் 4 விக்கெட், ஜிம்மி நீசம் 3 விக்கெட், ஜஸ்பிரிட் பும்ரா 2 விக்கெட்டுகளை எடுக்க ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக எவின் லீவிஸ் மட்டும் 24 (19) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

அதை தொடர்ந்து 91 என்ற எளிதான இலக்கை துரத்திய மும்பைக்கு ரோஹித் சர்மா 22 (13) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க மறுபுறம் அதிரடி காட்டிய இஷான் கிசான் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 50* (25) ரன்கள் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 8.2 ஓவர்களிலேயே 94/2 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Rahul

4. பஞ்சாப் (8.1): 2018 ஐபிஎல் தொடரில் இந்தூரில் நடைபெற்ற 48-வது லீக் போட்டியில் பெங்களூருவின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாத பஞ்சாப் 15.1 ஓவர்களிலேயே 88 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஆரோன் பின்ச் 26 (23) ரன்கள் எடுக்க பெங்களூர் சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

அதை தொடர்ந்து 89 என்ற சுலபமான இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு கேப்டன் விராட் கோலி 48* (28) பார்திவ் படேல் 40* (22) என தொடக்க வீரர்களே பஞ்சாப் பவுலர்களை புரட்டி எடுத்து அபார பினிஷிங் கொடுத்ததால் வெறும் 8.1 ஓவரில் 92/0 ரன்களை எடுக்க அந்த அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

RCB vs SRH

3. ஹைதெராபாத்: இந்த வருட 2022 தொடரில் ஹைதராபாத்துக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 54-வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூவை நடராஜன் 3 விக்கெட், மார்கோ யான்சென் 3 விக்கெட், புவனேஸ்வர் குமார் மற்றும் உம்ரான் மாலிக் தலா 1 விக்கெட் எடுத்து 16.1 ஓவர்களில் 68 ரன்களுக்கு சுருட்டினர். அதிகபட்சமாக பிரபு தேசாய் 15 (20) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து 69 என்ற ஈஸியான இலக்கை துரத்திய ஹைதராபாத்துக்கு இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடியாக 47 (28) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் 16* (17) ரன்கள் எடுத்து 8.0 ஓவரில் 72/1 ரன்களை எடுக்க வைத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை உறுதி செய்தார்.

Kochi Tuskers Kerala KTK

2. கொச்சி (7.2): 2011இல் மகிளா ஜெயவர்தனே தலைமையில் முதலும் கடைசியுமாக விளையாடிய கொசி டஸ்கர்ஸ் கேரளா லீக் சுற்றில் தொடர் தோல்விகளால் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இருப்பினும் 61-வது லீக் போட்டியாக நடைபெற்ற தனது கடைசி லீக் போட்டியில் ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தானை எதிர்கொண்ட அந்த அணி அட்டகாசமாக பந்துவீசி வெறும் 18.3 ஓவரில் 96 ரன்களுக்கு சுருட்டியது. அந்த அணிக்கு பிராட் ஹாட்ஜ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் எடுக்க ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அசோக் மேனரியா 31 (28) ரன்கள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 98 என்ற குறைந்த இலக்கை துரத்திய கொச்சிக்கு கேப்டன் ஜெயவர்த்தனே 6 (3) ரன்களில் அவுட்டானாலும் பிரண்டன் மெக்கல்லம் 29 (12) பார்த்தீவ் பட்டேல் 21* (14) ப்ராட் ஹோட்ஜ் 33* (17) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்களை எடுத்து 7.2 ஓவரில் 98/2 ரன்களை எட்ட வைத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி போட்டியில் வெற்றியுடன் விடைபெற்றனர்.

Sanath Jayasuriya Robin Uthappa MI

1. மும்பை (5.3): வரலாற்றின் முதல் ஐபிஎல் தொடரான 2008ல் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 38-வது லீக் போட்டியில் சச்சின் தலைமையிலான மும்பையை எதிர்கொண்ட கங்குலி தலைமையிலான கொல்கத்தா அந்த அணியின் மிரட்டலான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் 15.2 ஓவரில் வெறும் 67 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சௌரவ் கங்குலி மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் தலா 15 ரன்கள் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக ஷான் பொல்லாக் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை தொடர்ந்து 68 என்ற அல்வா போன்ற சுலபமான இலக்கை சேசிங் செய்த மும்பைக்கு சச்சின் டக் அவுட்டானாலும் மறுபுறம் பட்டாசாக வெடித்த மற்றொரு தொடக்க வீரர் சனத் ஜெயசூரியா 6 பவுண்டரி 3 சிக்சர்களை பறக்கவிட்டு 48* (17) ரன்களை விளாசி அதிரடி பினிஷிங் கொடுத்தார். அதனால் வெறும் 5.3 ஓவரிலேயே 68/2 ரன்கள் எடுத்த மும்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிவேகமாக சேசிங் செய்த அணியாக சாதனை படைத்தது.

Advertisement