நாங்க செய்ஞ்ச ஒரு தவறு தான் லக்னோ அணியிடம் பெற்ற மோசமான தோல்விக்கு காரணம் – புலம்பிய பிளமிங்

Fleming
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39-ஆவது லீக் போட்டியானது ஏப்ரல் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அசத்தியது.

அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய லக்னோ அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 213 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக லக்னோ அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு வெற்றியை சென்னை அணிக்கு எதிராக பெற்றது.

இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற எளிதான வாய்ப்பு இருந்தும் அணியில் ஏற்பட்ட சில தவறுகள் காரணமாக சென்னை அணி மோசமான தோல்வியை சந்தித்து இருந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் இந்த தோல்வி குறித்து பேசுகையில் கூறியதாவது :

- Advertisement -

சேப்பாக்கத்தில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் நடைபெற்றது. ஆனால் தற்போது லக்னோ அணிக்கு எதிராக போட்டி நடைபெற்ற ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சற்றும் உதவவில்லை. அதன் காரணமாகவே நாங்கள் தோல்வியை சந்தித்தோம் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : சொந்த மைதானத்தின் தன்மையை கூட எங்களால் சரியாக கனித்து அணியை தேர்வு செய்ய முடியாமல் போனது.

இதையும் படிங்க : பலி கிடாவான தமிழக வீரர்.. இதுல இந்தியாவின் அடுத்த கேப்டன் வேறயா? சுப்மன் கில் மீது ரசிகர்கள் அதிருப்தி

முதலில் ஒரு பிட்ச் இருந்தது அது ஸ்பின் பந்துவீச்சுக்கு நன்றாக உதவியது. ஆனால் தற்போதைய பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை. எங்களின் திட்டத்திற்கும் ஏற்ப இல்லாமல் எங்களது அணித்தேர்வு நேர்மறையாக இருந்துவிட்டது. அதனால் இந்த தோல்வியை நாங்கள் அடைந்தோம் என பிளமிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement