ஆள் இல்ல.. சிஎஸ்கே அணிக்காக தோனி அதை செய்றாரு.. ஊதி பெருசாக்காதீங்க.. பிளெமிங் பதிலடி

Stephen Fleming 4
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே பத்தாம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 59வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள அவ்விரு அணிகளும் இப்போட்டியில் வெற்றி பெறும் கட்டாயத்தில் விளையாடுகின்றன. குறிப்பாக நடப்பு சாம்பியன் சென்னைக்கு இப்போதுள்ள 4வது இடத்தை தக்க வைத்துக்கொள்ள இப்போட்டியில் வெற்றி அவசியமாகிறது.

முன்னதாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த வருடம் சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த தோனி சாதாரண விக்கெட் கீப்பராக விளையாட வருகிறார். மேலும் 42 வயதாகிவிட்ட அவர் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு பேட்டிங்கில் கடைசி சில ஓவர்களில் மட்டுமே களமிறங்கி வருகிறார். அதில் முதல் 7 போட்டிகளில் அவுட்டே ஆகாமல் எதிரணிகளை பந்தாடிய அவர் பஞ்சாப்புக்கு எதிராக 9வது இடத்தில் களமிறங்கினார்.

- Advertisement -

பிளெமிங் பதிலடி:
ஆனால் அப்போட்டியில் கோல்டன் டக் அவுட்டான தோனி 9வது இடத்தில் களமிறங்குவதற்கு பதிலாக நீங்கள் பேட்டிங் செய்ய வராமலேயே இருக்கலாம் என்று இர்பான் பதான், ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே முழங்கால் காயத்தால் தோனி கடைசி நேரத்தில் விளையாடுவதாக பயிற்சியளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

அது புரியாமல் அனைவரும் தொடர்ந்து பேசி ஊதி பெரிதாக்குவதாக தெரிவிக்கும் அவர் பேக்-அப் விக்கெட் கீப்பர் இல்லாத குறையை தோனி போக்கி வருவதாகவும் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் அவருடைய பணிச்சுமையை நிர்வகிக்கிறோம். அவர் நீண்ட நேரம் பேட்டிங் செய்வது கொஞ்சம் ரிஸ்க். நாங்கள் அவரை இழப்பதற்கான ரிஸ்கில் உள்ளோம்”

- Advertisement -

“எனவே அவர் கடைசி நேரத்தில் வந்து பவுண்டரி மற்றும் சிக்சர்களை அடித்து போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான சமநிலையை நாங்கள் கண்டறிய முயற்சிக்கிறோம். அந்த வேலையில் சிறப்பாக செயல்படும் அவர் போட்டியை கொடுத்து வருகிறார். தசையில் ஏற்பட்ட சிறிய காயத்தால் பெரிய பிரச்சனை இல்லை என்று ஏற்கனவே நான் தெளிவாகச் சொல்லி விட்டேன். ஆனாலும் அது தொடர்ந்து செய்தியாக்கப்படுகிறது”

இதையும் படிங்க: இதெல்லாம் ஆரம்பத்துல நடக்கவேண்டியது.. ஆனா இப்போ நடக்குது.. பஞ்சாப் அணியை வீழ்த்திய பிறகு – டூபிளெஸ்ஸிஸ் பேட்டி

“கடந்த வருடம் முழங்கால் அறுவை சிகிச்சையிலிருந்து அவர் குணமடைந்த போது பலவீனமாக இருந்தது. எங்களின் சவால்களில் ஒன்றாக எங்களுக்கு நல்ல பேக்-அப் கீப்பர் கிடைத்துள்ளார். ஆனால் அவர் எம்.எஸ். தோனி இல்லை. எனவே கடைசிக்கட்ட ஓவர்களில் அவர் பேட்டிங் செய்வதை நாங்கள் விரும்புகிறோம். பேட்டிங், கீப்பிங் ஆகியவற்றுடன் அவர் புதிய கேப்டனுடன் தனது ஆலோசனைகளை பகிர்ந்து கொள்வது முக்கியம். எனவே எங்களுக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் கடைசி நேரத்தில் களமிறக்கி அவரை பாதுகாக்க விரும்புகிறோம்” என்று கூறினார்.

Advertisement