இந்தியா குறை சொல்லக்கூடாது.. இங்கிலாந்து நியாயமா தான் இருக்கோம்.. கவாஸ்கர், பதானுக்கு மைக்கேல் வாகன் பதிலடி

Micheal Vaughan 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதில் லீக் சுற்றின் முடிவில் கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளன. முன்னதாக இத்தொடரில் விளையாடி வந்த இங்கிலாந்து வீரர்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்பாகவே 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நாடு திரும்பினார்கள்.

குறிப்பாக ஜோஸ் பட்லர், வில் ஜேக்ஸ், மொய்ன் அலி, ரீஸ் டாப்லி போன்ற இங்கிலாந்து வீரர்கள் இல்லாதது சென்னை, பெங்களூரு, ராஜஸ்தான் போன்ற அணிகளுக்கு பின்னடைவாக அமைந்தது. அதனால் கோபமடைந்த முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் “ஒன்று முழுமையாக விளையாடுங்கள். இல்லையேல் வராதீர்கள்” என்று இங்கிலாந்து வீரர்களை கடுமையாக விமர்சித்தார்.

- Advertisement -

நியாயமா இருக்கோம்:
அதே போல முழுமையாக விளையாடுவதாக சொல்லிவிட்டு பாதியிலேயே வெளியேறும் இங்கிலாந்து வீரர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்தார். இந்நிலையில் நாட்டுக்காக விளையாடுவதற்காக இங்கிலாந்து வீரர்கள் நியாயமான முடிவையே எடுத்துள்ளதாக முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பதிலடி கொடுத்துள்ளார். அத்துடன் ஐபிஎல் தொடரால் சர்வதேச அட்டவணைகள் நெருக்கமாக அமைக்கப்படுவதால் இங்கிலாந்து வீரர்கள் எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்து வீரர்கள் போல உங்களுடைய நாட்டுக்காக விளையாடுவதற்காக நீங்கள் வெளியேறினால் அது மிகவும் நியாயமானது என்று நான் நினைக்கிறேன். அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளனர். ஒருவேளை அது பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறாமல் இருந்திருந்தால் இங்கிலாந்து வீரர்கள் சென்றிருக்க மாட்டார்கள்”

- Advertisement -

“அந்தத் தொடர் காலண்டரில் இருக்கிறது. இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் இங்கிலாந்து சுமாராக விளையாடியது. எனவே அதில் முன்னேறுவதற்காக இங்கிலாந்து சில நடவடிக்கைகள் எடுத்துள்ளது. அதாவது கடந்த 50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பாக இங்கிலாந்து அணி சரியாக தயாராகவில்லை. அதனால் இம்முறை பாகிஸ்தானுக்கு எதிராக ஜோஸ் பட்லர் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் ஒன்றாக சேர்ந்து டி20 தொடரில் விளையாட உள்ளனர்”

இதையும் படிங்க: சாக்கடையில் வீசிட்டாங்கன்னு கிண்டலடிச்சாங்க.. ஆர்சிபி ஹீரோ யாஷ் தயாள் அப்பா பெருமிதமான பேட்டி

“ஐபிஎல் அட்டவணைகள் மிகவும் தாமதமாக உருவாக்கப்படுகின்றன. அது மே 19இல் முடிந்திருந்தால் இங்கிலாந்து வீரர்கள் சென்றிருக்க மாட்டார்கள். பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்தும் முழு பலத்துடன் கூடிய அணியுடன் விளையாடியிருக்கும்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2022க்குப்பின் ஐபிஎல் தொடர் 10 அணிகளுடன் 74 போட்டிகள் கொண்ட தொடராக விரிவடைந்துள்ளது. எனவே அதற்காக சர்வதேச அட்டவணையை குறை சொல்வது சரியல்ல என்றே சொல்லலாம்.

Advertisement