இதெல்லாம் ஆரம்பத்துல நடக்கவேண்டியது.. ஆனா இப்போ நடக்குது.. பஞ்சாப் அணியை வீழ்த்திய பிறகு – டூபிளெஸ்ஸிஸ் பேட்டி

Faf
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 58-வது லீக் போட்டியானது நேற்று தரம்சாலா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூரு அணி துவக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. இந்த போட்டியில் பெங்களூரு அணி சார்பாக விராத் கோலி 92 ரன்களையும், பட்டிதார் 55 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 242 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது பெங்களூர் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 17 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டூப்ளிசிஸ் கூறுகையில் : இந்த போட்டி மிகச் சிறப்பாக இருந்தது. கடைசி 5-6 ஆட்டங்களாக நாங்கள் 200 ரன்னுக்கு மேல் குவித்து வருகிறோம். இந்த தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் தொடர்ச்சியாக ஒரே தவறை செய்து வந்தோம்.

- Advertisement -

ஆனால் தற்போது பேட்டிங்கில் மிக ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். அதேபோன்று ஆறு முதல் ஏழு வீரர்கள் பௌலிங் செய்வதால் பந்து வீச்சிலும் தற்போது அனைத்தும் கூடி வந்துள்ளது. இந்த தொடரின் ஆரம்பத்தில் நாங்கள் சரியாக விளையாடவில்லை.

இதையும் படிங்க : மும்பையின் ஹெல்ப் தேவை.. கொதித்தெழுந்து வரும் ஆர்சிபி.. பிளே ஆஃப் செல்வதற்கு செய்ய வேண்டியது இதோ

ஆனால் தற்போது தொடரின் முடிவில் பேட்ஸ்மேன்கள் அனைவரும் ரன் குவிக்க ஆரம்பித்து விட்டார்கள். பந்துவீச்சாளர்கள் அனைவரும் விக்கெட்டுகளை எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இது ஒரு நல்ல நிகழ்வு தான் என டூப்ளிசிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement