இந்தியா வேர்ல்டுகப் ஜெயிக்கனும்னா மொதல்ல அவங்களுக்கு இந்த பர்மிஷன் குடுங்க – ஸ்டீபன் பிளமிங் கருத்து

Fleming
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி வரை முன்னேறிய இந்திய அணியானது அடிலெயிடு மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியின் போது இங்கிலாந்து அணியிடம் படுமோசமான தோல்வியை சந்தித்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது. இந்திய அணி பெற்ற அந்த மோசமான தோல்விக்கு பிறகு இந்திய அணியின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதுமட்டும் இன்றி கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணி எந்த ஒரு ஐசிசி உலகக் கோப்பையையும் கைப்பற்றாதது இந்திய அணியின் மீது பெரிய கேள்வியையே எழுப்பியுள்ளது.

IND-Team

- Advertisement -

தோனிக்கு பிறகு வந்த எந்த கேப்டனாலும் இதுவரை ஐசிசி நடத்திய கோப்பைகளை வெல்ல முடியவில்லை. இந்நிலையில் சி.எஸ்.கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங் இந்திய வீரர்களை வெளிநாட்டில் நடக்கும் லீக் தொடர்களில் விளையாட அனுமதித்தால் தான் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய வீரர்களை வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் அனுமதிக்க பிசிசிஐ முதலில் பர்மிஷன் வழங்க வேண்டும். உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் இதுபோன்ற பல வெளிநாட்டு தொடர்களில் விளையாடி வருவதன் மூலம் நல்ல அனுபவத்தை பெறுகின்றனர்.

IND

ஆனால் இந்திய வீரர்கள் இந்திய மண்ணில் மட்டுமே விளையாடி வருகின்றனர். அது தவிர்த்து பொதுவாக நடைபெறும் போட்டிகளுக்காகவே அவர்கள் வெளிநாடு சென்று விளையாடுகின்றனர். ஆனால் இந்திய வீரர்களும் வெளிநாடுகளில் நடக்கும் டீ 20 லீக்கில் கலந்து கொள்ளும் பட்சத்தில் நிச்சயம் அவர்களுக்கு அது உலகக்கோப்பையை வெல்ல ஒரு அனுபவமாக இருக்கும்.

- Advertisement -

ஏனெனில் தற்போது வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணியில் உள்ள அலெக்ஸ் ஹேல்ஸ், ஜாஸ் பட்லர், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டன் போன்ற பல வீரர்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பேஷ் தொடரில் விளையாடி வருகின்றனர். எனவே அது அவர்களுக்கு சாதகமாக அமைந்தது.

இதையும் படிங்க : பாகிஸ்தானை தெறிக்க விட்ட இங்கிலாந்து – கிரிக்கெட் வரலாற்றில் வெ.இ, இந்தியா படைக்காத ப்ரம்மாண்ட உலக சாதனை இதோ

அதேபோன்று இந்திய வீரர்களும் விளையாட்டு மண்ணில் சென்று விளையாடினால் நிச்சயம் அதற்கு ஏற்றார் போல் சிறப்பான அனுபவத்தை பெற்று இனிவரும் காலங்களில் ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியும். எனவே இந்திய வீரர்களை முதலில் வெளிநாட்டு தொடர்களில் விளையாட அனுமதியுங்கள் என ஸ்டீபன் பிளமிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement