தோனி கிட்ட இருக்குற அந்த குவாலிட்டி அப்படியே ருதுராஜ் கெய்க்வாட்டிடம் இருக்கு – ஸ்டீபன் பிளமிங் பாராட்டு

Fleming
- Advertisement -

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை தங்கள் விளையாடியுள்ள ஐந்து போட்டியில் மூன்று வெற்றி மற்றும் இரண்டு தோல்வி என 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தினை பிடித்துள்ளது. முன்னாள் கேப்டனான தோனிக்கு இதுவே கடைசி சீசன் என்பதனால் இந்த தொடரிலும் கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் சிஎஸ்கே அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற சி.எஸ்.கே வெளி மைதானங்களில் நடைபெற்ற 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் இன்று ஏப்ரல் 14-ஆம் தேதியான இன்று சி.எஸ்.கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் 7:30 மணிக்கு நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் : தோனி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு இடையே உள்ள ஒற்றுமை குறித்து பேசி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

தோனிக்கும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கும் இடையில் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. தோனி மிகவும் ஒரு கூலான கேப்டன். அதேபோன்று ருதுராஜ் கெய்க்வாட்டிடமும் அந்த குவாலிட்டி இருக்கிறது. அவரது கேப்டன்சி திறனை வெற்றி தோல்விகளை வைத்து நாங்கள் அளவிடவில்லை.

- Advertisement -

அவர் வீரர்களிடையே கடைபிடிக்கும் நடைமுறை, அணியின் சூழல் மற்றும் அவரின் ஆளுமை ஆகியவற்றை வைத்தே அவரது கேப்டன்சியை மதிப்பிடுகிறோம். தற்போது வரை அவரது கேப்டன்சி மிக சிறப்பாக உள்ளது. தோனியை போன்று நீண்ட ஆண்டுகளாக கேப்டனாக இருக்கும் தகுதியும் அவரிடம் இருக்கிறதாக நம்புகிறோம்.

இதையும் படிங்க : 25 வயது டெயில் எண்டரை அறிமுகப் போட்டியிலேயே ஓப்பனிங்கில் களமிறங்கியது ஏன்? சஞ்சு சாம்சன் விளக்கம்

அதேபோல் கேப்டன்சி காரணமாக அவரது பேட்டிங் ஸ்லோ ஆகிவிட்டது என்று சொல்ல முடியாது. ஏனெனில் அணியின் சூழலுக்கு ஏற்ப தற்போது விளையாடி வருகிறார். நிச்சயம் இந்த சீசனிலும் அவரது சிறப்பான ஆட்டம் வெளிவரும் என பிளமிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement