வெற்றி போனாலும் பரவால்ல.. உதவாக்கரை கிடையாது.. தோனி முன்னதாக பேட்டிங் செய்யாதது ஏன்? பிளெமிங் பேட்டி

Stephen Fleming
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 30ஆம் தேதி நடைபெற்ற 11வது போட்டியில் சென்னையை 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது. கௌகாத்தியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் நிதிஷ் ராணா 81 ரன்களை எடுத்த உதவியுடன் 183 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய சென்னைக்கு ரச்சின் ரவீந்திரா 0, ராகுல் திரிபாதி 23 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

மிடில் ஆர்டரில் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் 63 ரன்கள் எடுத்த போதிலும் விஜய் சங்கர் 9, சிவம் துபே 18 ரன்களில் அவுட்டாகி பின்னடைவைக் கொடுத்தனர். கடைசியில் ஜடேஜா 32*, தோனி 16, ஜேமி ஓவர்டன் 11* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 176-6 ரன்களை மட்டுமே எடுத்த சென்னை இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது. ராஜஸ்தானுக்கு அதிகபட்சமாக ஹசரங்கா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

வெற்றி போனாலும்:

முன்னதாக இந்த வருடம் சிஎஸ்கே அணியின் பேட்டிங் மோசமாக இருக்கும் நிலையில் கடந்தப் போட்டியில் தோனி 9வது இடத்தில் களமிறங்கியது தோல்வியை கொடுத்தது. அதனால் இந்தப் போட்டியில் 7வது இடத்தில் தோனியின் களமிறங்கியும் வெற்றி காண முடியவில்லை. அதைப் பார்த்த ரசிகர்கள் விஜய் சங்கர் போன்றவருக்கு பதிலாக தோனி வந்து விளையாடியிருக்கலாம் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

ஆனால் வெற்றிப் போனாலும் பரவாயில்லை என்ற வகையில் தோனி மேலே வர அடம் பிடிப்பதாகவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்நிலையில் வயது மற்றும் முழங்காலில் செய்த அறுவைச்சிகிச்சை காரணமாக தோனியால் 10 ஓவர்கள் பேட்டிங் செய்ய முடியாது என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். அதே சமயம் விக்கெட் கீப்பிங், கேப்டனுக்கு ஆலோசனை தெரிவிப்பது போன்ற விஷயங்களில் உதவும் தோனி உதவாக்கரை கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

உதவாக்கரை கிடையாது:

இது பற்றி பிளெமிங் பேசியது பின்வருமாறு. “ஆம் இது நேரத்தைப் பொறுத்தது. தோனி அதை மதிப்பிட்டுள்ளார். ஒரு காலத்தில் இருந்தது போல் தற்போது அவரது முழங்கால் இல்லை. தற்போது அவர் நகர்ந்தாலும் இன்னும் சில பிரச்சினைகள் இருக்கிறது. அவரால் பேட்டை வைத்துக்கொண்டு 10 ஓவர்கள் முழுமையாக ஓட முடியாது. எனவே என்ன கொடுக்க முடியும் என்பதை அவர் அளவிடுவார்”

இதையும் படிங்க: சிஎஸ்கே அணியை நொறுக்குவற்கான அந்த திட்டத்தை டிராவிட் தான் கொடுத்தாரு.. ஆட்டநாயகன் ராணா பேட்டி

“இன்று போல் போட்டி சமநிலையில் இருந்தால் அவர் கொஞ்சம் முன்னதாகவே பேட்டிங் செய்ய செல்வார். மற்றபடி மற்ற வீரர்களுக்கு ஆதரவு கொடுப்பார். அதே சமயம் தலைமைப் பொறுப்பில் உதவுவது, விக்கெட் கீப்பிங் போன்ற பல்வேறு விஷயங்களில் தோனி இப்போதும் எங்களுக்கு மதிப்பு மிக்கவராகவே இருக்கிறார்” எனக் கூறினார்.

Advertisement