சிஎஸ்கே அணியிலிருந்து அஸ்வின் நீக்கப்பட்டது ஏன்? மீண்டும் பிளேயிங் லெவனில் வருவாரா? கோச் பிளெமிங் விளக்கம்

Stephen Fleming
- Advertisement -

ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்காக போராடி வருகிறது. இந்த வருடம் முதல் போட்டியில் மும்பையை வென்ற சென்னை அணி அதற்கடுத்த 5 போட்டிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக 5 தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்தது. அதன் பின் லக்னோவுக்கு எதிராக வென்ற சென்னை அணி அடுத்ததாக மும்பையை அதனுடைய சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.

முன்னதாக இந்த வருடம் சிஎஸ்கே அணிக்காக தமிழகத்தின் நட்சத்திரம் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வாங்கப்பட்டது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. ஏனெனில் 2010, 2011 கோப்பைகளை தோனி தலைமையில் சிஎஸ்கே வெல்வதற்கு உதவிய அவர் 2015க்குப்பின் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி வந்தார். மேலும் இந்தியாவுக்காக 2வது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின் சமீபத்தில் ஓய்வு பெற்றார்.

- Advertisement -

நீக்கப்பட்ட அஸ்வின்:

அந்த வகையில் பெரிய அனுபவத்தை கொண்ட அவரை 10 வருடங்கள் கழித்து இம்முறை சிஎஸ்கே அணி 9.70 கோடிக்கு வாங்கியதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பில் சொந்த ஊரான சென்னையில் நடைபெற்ற போட்டிகள் உட்பட அஸ்வின் எந்த போட்டியிலும் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதனால் லக்னோவுக்கு எதிரான போட்டியில் அவரை கேப்டன் தோனி சிஎஸ்கே பிளேயிங் லெவனிலிருந்து நீக்கினார்.

இந்நிலையில் அஸ்வினை நீக்க விரும்பவில்லை என்றாலும் டாஸ் கிடைக்காதது, தொடர் தோல்விகள் போன்றவற்றால் கழற்றி விட வேண்டிய நிலைமை வந்ததாக பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார். மேலும் நூர் அஹ்மத், ஜடேஜா இருப்பதன் காரணத்தாலும் சிஎஸ்கே வெற்றிப் பாதைக்கு வரத் துவங்கியதாலும் அஸ்வின் மீண்டும் சேர்க்கப்பட வாய்ப்பு குறைவு என்றும் அவர் மறைமுகமாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

அஸ்வின் வாய்ப்பு:

“அஸ்வின் போன்ற தரமான பிளேயரை விடுவது எளிதாக இருக்காது. நாங்கள் அவருக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வேலையைக் கொடுக்க ஆராய்ந்தோம். நூர்அஹ்மத், ஜடேஜா போன்ற ஸ்பின்னர்கள் இருக்கும் போது அவரைப் போன்ற 3வது ஸ்பின்னர் ஆடம்பரமாக இருப்பார். அது அஸ்வின் எங்களுடைய அணியில் பெயருக்காக இல்லை என்பதைச் சொல்கிறது”

இதையும் படிங்க: சி.எஸ்.கே அணியை விட மும்பை அணி தான் தனிப்பட்ட முறையில் அந்த வாய்ப்பை தராங்க – மிட்சல் சான்ட்னர் கருத்து

“ஆனால் சில நேரங்களில் உங்களுடைய அணியின் பலத்தை அதிகரிக்கவும் பலவீனத்தை மறைக்கவும் சில தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கும். அந்த வகையில் நாங்கள் எங்களுடைய அணியை வெற்றிப் பாதையில் கட்டமைப்பதற்குத் தேவையான சரியான சேர்க்கையை உருவாக்க பார்க்கிறோம்” என்று கூறினார். முன்னதாக அஸ்வின் நீக்கப்பட்ட பின் சிஎஸ்கே பவுலிங் துறை ஓரளவு நன்றாக இருப்பதாக லக்னோ போட்டியின் பொது தோனியும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement