இந்தியாவில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 38-வது லீக் போட்டியானது இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றன.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருப்பது தான் மகிழ்ச்சி : மிட்சல் சான்ட்னர்
இதன் காரணமாக தற்போது இவ்விரு அணியின் வீரர்களும் மும்பை வான்கடே மைதானத்தில் தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர். ஐபிஎல் தொடரில் ஜாம்பவான் அணிகளான இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. அதே வேளையில் மும்பை இந்தியன்ஸ் அணியானது 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் ஏழாவது இடத்தில் இருக்கிறது.
இவ்விரு அணிகளும் இன்று மோதுவதால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்? என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக விளையாட இருக்கும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான மிட்சல் சான்ட்னர் சிஎஸ்கே மற்றும் மும்பை ஆகிய இரண்டு அணிகள் குறித்தும் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
மும்பை மற்றும் சென்னை ஆகிய இரண்டு அணிகளுக்குமே நிறைய ஒற்றுமை உள்ளன. ஏனெனில் இரண்டு அணிகளுமே ஐபிஎல் தொடரில் ஒரு வெற்றிகரமான அணிகள். எப்போதுமே இந்த இரண்டு அணிகளும் வீரர்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்குகிறார்கள். இந்த ஆண்டு இந்த இரண்டு அணிகளுமே சரியாக விளையாடவில்லை என்று கூறலாம். ஆனாலும் இது ஒரு கடினமான தொடர் என்பதனால் நிச்சயம் இனிவரும் போட்டிகள் முக்கியமான போட்டிகளாக மாறும்.
இதையும் படிங்க : கவாஸ்கர் ஸ்டுபிட்ன்னு திட்டியதில் தப்பே இல்ல.. இனியாச்சும் அதை செய்யாம கோலி மாதிரி ஆடுங்க.. திவாரி விமர்சனம்
மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தற்போது நான் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் மும்பை அணிக்காக நான் அதிகநேரம் விளையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார். இதன்மூலம் சிஎஸ்கே அணியை விட மும்பை அணியில் தான் தனக்கு தனிப்பட்ட முறையில் அதிக வாய்ப்புகள் கிடைப்பதாகவும் மிட்சல் சான்ட்னர் குறிப்பிட்டுள்ளார்.



