கவாஸ்கர் ஸ்டுபிட்ன்னு திட்டியதில் தப்பே இல்ல.. இனியாச்சும் அதை செய்யாம கோலி மாதிரி ஆடுங்க.. திவாரி விமர்சனம்

Manoj Tiwary
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 19ஆம் தேதி ஜெய்ப்பூரில் 36வது போட்டி நடைபெற்றது. அதில் ராஜஸ்தான் அணியை வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் சாய்த்த லக்னோ தங்களது 5வது வெற்றியை பெற்றது. ஒருவேளை அந்தப் போட்டியில் லக்னோ தோல்வியை சந்தித்திருந்தால் அதற்கு கேப்டன் ரிசப் பண்ட் வெளிப்படுத்திய மோசமான பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்திருக்கும் என்றே சொல்லலாம்.

ஏனெனில் இந்த வருடம் 27 கோடி என்ற வரலாறு காணாத தொகைக்கு லக்னோ அணிக்காக வாங்கப்பட்டுள்ள அவர் இதுவரை ஒரு போட்டியில் கூட அசத்தவில்லை. இதுவரை 8 போட்டிகளில் 106 ரன்களை 15.14 என்ற மோசமான சராசரியில் எடுத்துள்ள அவர் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. அப்படிப்பட்ட அவர் இந்தப் போட்டியிலாவது கொஞ்சம் பொறுப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

திட்டியதில் தவறில்லை:

ஆனால் முதல் பந்திலேயே எல்பிடபுள்யூ முறையில் விக்கெட்டை இழப்பதில் தப்பிய அவர் 3 (9) ரன்னில் ஹஸரங்காவுக்கு எதிராக ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் இதே போல கடந்த ஆஸ்திரேலிய தொடரின் ஒரு போட்டியில் விக்கெட்டை இழந்த ரிஷப் பண்ட்டை நேரலையில் சுனில் கவாஸ்கர் “ஸ்டுப்பிட்” என்ற விமர்சித்ததில் தவறே இல்லை என மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.

ஏனெனில் பேட்டை நேராக வைத்து ரன்கள் அடிக்கும் திறமை இருந்தும் ரிஷப் பண்ட் அதை சரியாகப் பயன்படுத்துவதில்லை என்று திவாரி சாடியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் திறமை இருந்தும் தடுமாறக்கூடிய வீரர். களத்திற்கு சென்றதும் அவர் ரிவர்ஸ் ஸ்வீப் விளையாட வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அவர் அதைச் செய்கிறார்”

- Advertisement -

கோலியை பாருங்க:

“அதனாலேயே கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது சுனில் கவாஸ்கர் நேரலையில் விமர்சித்தார். ரிஷப் பண்ட் பேட்டை நேராக வைத்து ரன்கள் குவிக்கும் திறனைக் கொண்டவர் என்பது அவருக்கும் தெரியும். ஆனாலும் அதை ஏன் அவர் செய்வதில்லை? ஏன் வழக்கத்துக்கு மாறான விஷயங்களுக்கு செல்கிறார்? என்னைக் கேட்டால் விராட் கோலியிடம் அவர் கற்றுக்கொள்ள வேண்டும்”

இதையும் படிங்க: 8ம் க்ளாஸ் பையன்.. யுவ்ராஜ் மாதிரி அசத்திட்டான்.. சூர்யவன்சிக்கு கூகுள் சுந்தர் பிச்சை, பில்லிங்ஸ் பாராட்டு

“விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்த போது ஒருநாள் போட்டிகளில் 100 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடவில்லை. மாறாக 7 பந்தில் 10, 5 பந்தில் 10 ரன்கள் அடிப்பது போல கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார். அது போல பண்ட் தற்போது கொஞ்சம் நேரம் எடுத்து விளையாட வேண்டும். டி20 போட்டி என்பதற்காக நீங்கள் அதிரடியாக விளையாடி வேகமாக முடிக்க வேண்டும் என்ற அர்த்தமில்லை. இங்கேயும் உங்களுக்கு 120 பந்துகள் இருக்கிறது” எனக் கூறினார்.

Advertisement