8ம் க்ளாஸ் பையன்.. யுவ்ராஜ் மாதிரி அசத்திட்டான்.. சூர்யவன்சிக்கு கூகுள் சுந்தர் பிச்சை, பில்லிங்ஸ் பாராட்டு

Sundar Pichai
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 19ஆம் தேதி ஜெய்ப்பூரில் 36வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. முன்னதாக அந்தப் போட்டியில் வெறும் 14 வயதாகும் இளம் இந்திய வீரர் வைபவ் சூரியவன்சி ராஜஸ்தான் அணிக்காக அறிமுகமாக களமிறங்கினார்.

அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் மிகவும் இளம் வயதிலேயே அறிமுகமாகி விளையாடிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். ஏற்கனவே அண்டர்- 19 அளவிலும் இந்தியாவுக்காக விளையாடிய இளம் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்த அவர் உள்ளூரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதனால் ஐபிஎல் தொடரில் அவரை ராஜஸ்தான் அணி நிர்வாகம் நம்பி வாங்கியது.

- Advertisement -

அபார துவக்கம்:

அந்த வாய்ப்பில் 181 ரன்களை சேசிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு சூரியவன்சி துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பைப் பெற்றார். அதில் சர்துள் தாகூருக்கு எதிராக சந்தித்த தன்னுடைய முதல் பந்திலேயே அவர் அட்டகாசமான சிக்ஸரை பறக்க விட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் தனது கேரியரின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த 9வது என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

இதற்கு முன் ராப் குவினே, கெவோன் கூப்பர், ஆண்ட்ரே ரசல், கார்லஸ் ப்ரத்வெய்ட், அன்கிட் சௌத்ரி, ஜாவோன் சீர்லெஸ், சித்தேஷ் லாட், மஹீஸ் தீக்சனா, சமீர் ரிஸ்வி ஆகியோரும் அந்த சாதனையை படைத்துள்ளனர். தொடர்ந்து அட்டகாசமாக விளையாடிய சூரியவன்சி 2 பவுண்டரி 3 சிக்சருடன் 34 (20) ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்போது கலங்கிய கண்களுடன் உணர்வு பூர்வமாக அவர் வெளியேறியது ரசிகர்களின் நெஞ்சத்தை தொட்டது.

- Advertisement -

குவிந்த பாராட்டு:

இந்நிலையில் வெறும் 8வது வகுப்பு படிக்கும் பையன் சூர்யவன்சி ஆட்டத்தைப் பார்ப்பதற்காக அமெரிக்காவில் தூக்கத்தை விட்டு எழுந்ததாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் (எக்ஸ்) அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் எட்டாம் வகுப்பு மாணவன் விளையாடுவதைப் பார்த்து எழுந்தேன். என்ன ஒரு அறிமுகம்” என்று பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க: லாஸ்ட் ஓவர் போடறதுக்கு முன்னாடி ஆவேஷ் கானிடம் இதைத்தான் சொன்னேன்.. வெற்றிக்கு பிறகு – ரிஷப் பண்ட் மகிழ்ச்சி

இங்கிலாந்து வீரர் ஷாம் பில்லிங்ஸ். “இது முற்றிலும் அபத்தமானது. 14 வயதில் முதல் பந்தில் சிக்ஸர். அவருடைய பேட் சுழற்றலைப் பாருங்கள். அது யுவராஜ் போல் இருக்கிறது. வாவ்” என்று பதிவிட்டு சூரியவன்சியை பாராட்டியுள்ளார். முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாமின் பிளமிங். “ஐபிஎல் அறிமுகத்தில் வைபவ் முதல் பந்திலேயே கவர்ஸ் திசைக்கு மேலே சிக்ஸ் அடித்துள்ளார். அதுவும் 14 வயதில்” என்று ஆச்சரியத்துடன் பாராட்டியுள்ளார்.

Advertisement