IPL 2023 : அவர வாங்காம விட்டதுக்காக இப்போவும் வருத்தப் படுறோம் – தமிழக வீரரை பாராட்டிய ஸ்டீபன் பிளெமிங்

Stephen Fleming
- Advertisement -

உச்சகட்ட பரபரப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 13 போட்டிகளில் 7 வெற்றிகளையும் 4 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. குறிப்பாக கொல்கத்தாவுக்கு எதிராக நடைபெற்ற கடந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்ற அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற டெல்லிக்கு எதிரான தன்னுடைய கடைசி லீக் போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Shivam Dube Varun Chakravarthy

- Advertisement -

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னையை அதிரடியாக விளையாட முடியாத அளவுக்கு வெறும் 144/6 ரன்களுக்கு கட்டுப்படுத்திய கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதிலும் குறிப்பாக அதிரடியாக விளையாட முயன்ற ருதுராஜ் 17 (13) ரகானே 16 (11) என நல்ல ஃபார்மில் இருக்கும் முக்கிய பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கிய வருண் சக்கரவர்த்தி ஆரம்பத்திலேயே ஏற்ப்படுத்தி அழுத்தத்தில் மேற்கொண்டு விரைவாக ரன்களை சேர்க்க முடியாமல் சென்னை தோற்றது.

பிளெமிங் வருத்தம்:
தமிழ்நாட்டைச் சேர்ந்த அவர் ஆரம்ப காலங்களில் சென்னை அணியின் நெட் பவுலராக செயல்பட்டு டிஎன்பிஎல் தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் 2019இல் பஞ்சாப் அணிக்கு 8.4 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கப்பட்டு பின்னர் 2020இல் கொல்கத்தா அணிக்காக 4 கோடிக்கு வாங்கப்பட்டார். அந்த சீசனில் அசத்தலாக செயல்பட்டதால் 2021 டி20 உலக கோப்பையில் நேரடியாக இந்தியாவுக்கு தேர்வு செய்யப்பட்ட வருண் சக்கரவர்த்தி துரதிஷ்டவசமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் அத்தோடு கழற்றி விடப்பட்டார்.

varun chakravarthy

அதை தொடர்ந்து கடந்த வருடம் ஃபார்மை இழந்து தடுமாறி அவர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டாலும் இந்த வருடம் மீண்டும் நம்பி தக்க வைக்கப்பட்டார். அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாகும் வகையில் இந்த சீசனில் மீண்டும் அசத்தும் அவர் இதுவரை 19 விக்கெட்களை எடுத்து சுனில் நரேனுக்கு நிகராக வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். இந்நிலையில் தங்களது அணியில் நெட் பவுலராக செயல்பட்ட வருண் சக்கரவர்த்தியை கடந்த சில வருடங்களுக்கு முன்பே ஐபிஎல் ஏலத்தில் வாங்க தவறியதை நினைத்து இப்போதும் வருந்துவதாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக வலைப்பயிற்சியில் தோனி உட்பட முக்கிய வீரர்களை திணறடித்த அவரை வாங்காமல் தவற விட்டதற்காக இப்போதும் சென்னை அணி வருந்துவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி கொல்கத்தா போட்டிக்கு பின் பேசியது பின்வருமாறு. “அவரை வாங்காமல் விட்டது இப்போதும் எங்களுக்கு வலியை கொடுக்கிறது. ஏனெனில் அவர் பல வருடங்களாக வலை பயிற்சியில் அபாரமாக செயல்பட்டு எங்களை தொல்லை கொடுத்துள்ளார். இருப்பினும் ஏலம் சென்ற விதத்தில் நாங்கள் அவரை தக்க வைக்க முடியவில்லை. குறிப்பாக இதர ஐபிஎல் அணிகளில் இருக்கும் தமிழ்நாடு வீரர்களுக்கு அவரைப் பற்றி நன்கு தெரியும்”

Fleming

“அதனால் அவரை ரகசியமாக எங்களால் பாதுகாக்க முடியவில்லை. இருப்பினும் வலை பயிற்சியில் பந்து வீசிய போதே நாங்கள் அவருடைய திறமையால் கவரப்பட்டோம். இந்த வருடம் அவரை பெரிய தொகை கொடுத்து வாங்குவதற்கும் நாங்கள் விரும்பினோம். அவர் இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசினார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: IPL 2023 : செய்றதையும் செஞ்சுட்டு சண்டை போட்ட கொல்கத்தா கேப்டன் – மொத்த டீமையும் வெச்சு செய்த அம்பயர்கள், நடந்தது என்ன

அதாவது தினேஷ் கார்த்திக் போன்ற இதர தமிழக வீரர்களுக்கு வருண் சக்கரவர்த்தியின் திறமை நன்றாக தெரிந்திருந்ததால் அவரை சென்னை அணியிலேயே ரகசியமாக வைத்திருந்து வாங்க முடியாமல் போனதாக ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார். இருப்பினும் அடுத்து வரும் வருடங்களில் அவரை கொல்கத்தா விடுவித்தால் நிச்சயம் வாங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement