IPL 2023 : செய்றதையும் செஞ்சுட்டு சண்டை போட்ட கொல்கத்தா கேப்டன் – மொத்த டீமையும் வெச்சு செய்த அம்பயர்கள், நடந்தது என்ன

Nitish Rana
- Advertisement -

உச்சகட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 14ஆம் தேதி நடைபெற்ற 61வது லீக் போட்டியில் சென்னையை 11 வருடங்கள் கழித்து அதன் சொந்த ஊரான சேப்பாக்கத்தில் தோற்கடித்த கொல்கத்தா பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை 20 – 30% தக்க வைத்துக் கொண்டது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் சுமாராக செயல்பட்டு வெறும் 144/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சிவம் துபே 48* (34) ரன்கள் எடுக்க கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக சுனில் நரேன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 145 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு ஜேசன் ராய் 12, ரஹ்மத்துல்லா குர்பாஸ் 1, வெங்கடேஷ் ஐயர் 9 என டாப் ஆடர் பேட்ஸ்மேன்கள் தீபக் சஹாரின் வேகத்தில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் 4வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரிங்கு சிங் 54 (43) ரன்களும் கேப்டன் நிதிஷ் ராணா 57* (44) ரன்களும் எடுத்து 18.3 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர். அதனால் டெல்லிக்கு எதிரான கடைசி போட்டியில் வென்றால் தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு சென்னை தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

மொத்தமாக தண்டனை:
முன்னதாக அந்தப் போட்டியில் முதலில் பந்து வீசிய கொல்கத்தா ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டு சென்னையை அதிரடி காட்ட விடாமல் கட்டுக்குள் வைத்திருந்த போதிலும் 19வது ஓவரின் முடிவில் நிர்ணயிக்கப்பட்ட ஓவருக்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை. அதனால் அடிப்படை விதிமுறைப்படி கடைசி ஓவரில் உள் வட்டத்திற்கு வெளியே 5 ஃபீல்டர்களில் ஒரு ஃபீல்டரை நடுவர்கள் குறைத்தனர். ஆனால் அதுவரை கட்டுக்குள் இருந்த போட்டி கடைசி ஓவரில் அதன் காரணமாக சென்னையின் பக்கம் திரும்பி விடுமோ என்ற எண்ணத்துடன் அதிருப்தியை வெளிப்படுத்திய கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா நேரடியாக நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது “நாங்கள் ஒன்றும் இதை சும்மா சொல்லவில்லை மைதானத்தில் தெரியும் பெரிய திரையில் நீங்கள் மெதுவாக செய்யப்பட்டதை பாருங்கள்” என்று காரணத்தை சுட்டிக் காட்டிய நடுவர்கள் உள்வட்டத்திற்கு வெளியே 1 ஃபீல்டரை குறைத்து கண்டிப்புடன் நடந்து கொண்டனர். இந்நிலையில் சென்னைக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசிய காரணத்திற்காக கொல்கத்தா அணியின் கேப்டன் நித்திஷ் ராணாவுக்கு 24 லட்சம் அபராதமாக விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக எச்சரிக்கை விடுத்துள்ள ஐபிஎல் நிர்வாகம் இந்த சீசனில் ஏற்கனவே ஒரு போட்டியில் அவரது தலைமையிலான கொல்கத்தா இதே போல குறிப்பிட்ட நேரத்தை தாண்டி தாமதமாக மெதுவாக பந்து வீசியிருந்தது. அந்த வகையில் தற்போது மீண்டும் 2வது முறையாக தாமதமாக பந்து வீசிய காரணத்தால் கொல்கத்தா அணியில் விளையாடும் சப்ஸ்டிடியூட் உட்பட அனைத்து வீரர்களுக்கும் தலா 6 லட்சம் அல்லது இப்போட்டியின் சம்பளத்திலிருந்து 25% அபராதமாக விதிக்கப்படுவதாகவும் ஐபிஎல் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

அப்படி கேப்டன் மட்டுமல்லாது மொத்த அணிக்கும் அபராதம் விதித்து அம்பயர்கள் கண்டிப்புடன் நடந்து கொண்டுள்ளது கொல்கத்தா அணி ரசிகர்களிடம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. முன்னதாக இந்த சீசனின் ஆரம்பத்தில் மும்பைக்கு எதிரான போட்டியில் அந்த அணி வீரர் ரித்திக் ஷாக்கீன் உடன் களத்தில் நேருக்கு நேராக ஏற்பட்ட மோதலில் மோசமான கெட்ட வார்த்தையை பயன்படுத்தி திட்டியதற்காக நித்திஷ் ராணாவுக்கு அந்த போட்டியிலிருந்து 25% அபராதமாக விதிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:IPL 2023 : அந்த இந்திய வீரரை சரியா யூஸ் பண்ணாத உங்களுக்கு வெற்றி எப்டி கிடைக்கும் – ஹைதராபாத்தை விளாசிய இர்பான் பதான்

அந்த வகையில் முதல் முறையாக இந்த சீசனில் கேப்டனாக செயல்படும் அவர் இத்தொடர் முடிவதற்குள் 3வது முறையாக அபராதம் கட்டியுள்ளார். இந்த நிலையில் இதுவரை பங்கேற்ற 12 போட்டிகளில் 5 வெற்றி 7 தோல்விகளுடன் 8வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அடுத்த 2 போட்டிகளில் வென்று எஞ்சியிருக்கும் அசாத்தியமான 20 – 30% பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை எட்டுவதற்கு போராட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement