இந்திய பசங்க இதை செய்றத பாத்தா கவலையா இருக்கு.. பிளெமிங் கருத்தை சாடும் சிஎஸ்கே ரசிகர்கள்

Stephen Fleming
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விசில் போட முடியாத அளவுக்கு திணறலாக விளையாடி வருகிறது. பொதுவாகவே சென்னை என்றால் பேட்டிங்கில் அதிரடியாக 200 ரன்கள் குவித்து நன்றாக பவுலிங் செய்து வெற்றி பெறக்கூடிய அணியாக அறியப்படுகிறது. மேலும் புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தொடர்ச்சியாக தகுதி பெறுவதில் பெயர் போன அணியாகவும் சிஎஸ்கே வலம் வருகிறது.

ஆனால் இம்முறை சென்னை அதற்கு நேர்மாறாக பேட்டிங்கில் பவர் பிளே ஓவர்களில் 50 ரன்கள் தாண்டுவதற்கே திண்டாடுகிறது. அதே போல மிடில் ஓவர்களிலும் சீராக ரன்கள் குவித்தத் திணறும் அந்த அணியால் டெத் ஓவர்களில் வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்ய முடியவில்லை. பவுலிங் ஓரளவுக்கு நன்றாக இருந்த போதிலும் ஃபீல்டிங் துறையில் ஏகப்பட்ட கேட்ச்சுகள் விடுகிறார்கள்.

- Advertisement -

முதல் பந்திலேயே அடிக்காதீங்க:

அதன் காரணமாக வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருடம் சிஎஸ்கே 5 போட்டிகளில் 5 தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்தது. அத்துடன் 2019க்குப்பின் 180 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் திணறும் அந்த அணி இதுவரை 8 போட்டிகளில் 2 வெற்றி 6 தோல்விகளைப் பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடும் சென்னை இங்கிருந்து பிளே ஆஃப் செல்வது அசாத்தியமானதாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்த வருடம் சிஎஸ்கே அணியின் துவக்க வீரர்கள் அதிரடியாக விளையாட திணறுவதை அனைவரும் அறிவோம். அந்த சூழ்நிலையில் மும்பைக்கு எதிரானப் போட்டியில் அறிமுகமான 17 வயது வீரர் ஆயுஷ் மாத்ரே முதல் பந்திலேயே அதிரடி காட்ட முயற்சித்தார். அதற்கடுத்த பந்துகளில் அவர் 4, 6, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டது சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

- Advertisement -

பிளெமிங் கவலை:

ஆனால் இப்படி ஆயுஷ் மாத்ரே, பிரியான்ஸ் ஆர்யா, சூர்யவன்சி போன்ற இளம் இந்திய வீரர்கள் முதல் பந்திலேயே சிக்சர் அடிக்க முயற்சிப்பதைப் பார்ப்பது தமக்குக் கவலையளிப்பதாக சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். அதற்கான காரணம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவில் இளம் வீரர்கள் முதல் பந்திலிருந்தே பவுலர்களை அதிரடியாக எதிர்கொள்வதை நாம் பார்க்கிறோம்”

இதையும் படிங்க: எல்லா நேரமும் 15 ரன்ரேட்.. அதை செய்யாத நீங்க ரசலை குறை சொல்லாதீங்க.. ரஹானேவுக்கு ப்ராவோ பதில்

“இந்த அணுகுமுறை தந்திரமான சவாலான சூழ்நிலைகளில் வெற்றி பெறக்கூடியதா? என்பது எனக்குத் தெரியாது. இதனால் கிரிக்கெட்டில் இருக்கும் நுணுக்கங்கள் வளரப் போகிறதா? என்பதும் தெரியாது. அதற்காக நான் கவலைப்படுகிறேன்” என்று கூறினார். இதைப் பார்க்கும் சிஎஸ்கே ரசிகர்கள் டி20 கிரிக்கெட்டில் முதல் பந்திலிருந்தே அடிக்காமல் வேறு எப்படி விளையாட வேண்டும்? என்று அவரை சாடுகின்றனர்.

Advertisement