தோனிக்காக காயம் என்ற பெயரில் ருதுராஜ் நீக்கப்பட்டாரா? காயமடைந்தது எப்படி? பிளெமிங் விளக்கம்

Stephen Fleming
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாற்றமாக விளையாடி வருகிறது. ருதுராஜ் தலைமையில் முதல் போட்டியில் மும்பையில் தோற்கடித்த சென்னை அதற்கடுத்த 4 போட்டிகளிலும் வரிசையாக தோற்றது. அதனால் புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் விழுந்துள்ள சென்னை இங்கிருந்து சிறப்பாக விளையாடி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா? என்பது கேள்வியாக மாறியுள்ளது.

இந்த சூழ்நிலையில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயத்தால் எஞ்சிய போட்டிகளில் விலகியுள்ளது சென்னை அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. ஏனெனில் சென்னை அணியின் பேட்டிங் துறையில் அவர் தான் ஓரளவு தொடர்ச்சியாக அசத்தக்கூடிய பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார். அந்த நிலையில் தோனி எஞ்சிய போட்டிகளில் கேப்டனாக செயல்படுவார் என்று பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளம்மிங் அறிவித்துள்ளார்.

- Advertisement -

காயம் எப்படி:

அதைப் பார்க்கும் எதிரணி ரசிகர்கள் தொடர் தோல்விகளால் சென்னை நிர்வாகம் ருதுராஜை காயம் என்ற பெயரில் நீக்கியதாக சந்தேகம் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் மார்ச் 30ஆம் தேதி கௌகாத்தியில் நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் துசார் தேஷ்பாண்டே வீசிய பவுன்சர் பந்து ருதுராஜ் முழங்கையில் பட்டு காயத்தை உண்டாக்கியதாக பிளமிங் கூறியுள்ளார். அது தற்போது தான் முழுமையாக தெரிய வந்ததால் ருதுராஜ் விலகியுள்ளதாக பிளெமிங் தெரிவித்துள்ளார்.

மேலும் தோனி கேப்டன்ஷிப் பொறுப்பை மீண்டும் ஏற்க சம்மதித்தது பற்றி அவர் விளக்கமாக பேசியது பின்வருமாறு. “ருதுராஜ் கௌகாத்தியில் காயத்தை சந்தித்தார். அதையும் தாண்டி அடுத்தப் போட்டியில் கொஞ்சம் வலியுடன் அவர் விளையாடினார். அவரது காயத்தை நாங்கள் எக்ஸ்ரே வழியாகப் பார்த்தும் தெளிவாக நிலைமை தெரியவில்லை”

- Advertisement -

பிளெமிங் விளக்கம்:

“பின்னர் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்த போது அவரது முழங்கையில் ரேடியல் கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தெரிய வந்தது. எனவே விலகிய அவருக்காக நாங்கள் ஏமாற்றத்துடன் வருத்தத்தை சந்தித்துள்ளோம். காயத்தையும் தாண்டி விளையாட விரும்பிய அவர் துரதிஷ்டவசமாக தற்போது தொடரிலிருந்து மொத்தமாக வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக எம்எஸ் தோனி எனும் அன்கேப்ட் பிளேயர் எங்களுக்காக எஞ்சிய போட்டிகளில் கேப்டனாக செயல்பட உள்ளார்”

இதையும் படிங்க: இப்போவும் எங்க அப்பா என்னை திட்றாரு.. வெளியில் இருந்து வரும் விமர்சனங்கள் குறித்து – அஷ்வின் கருத்து

“அதே சமயம் ருதுராஜ்க்கு தகுந்த மாற்று வீரர்களை நாங்கள் பார்க்க வேண்டும். அதே சமயம் நீண்ட காலமாக எங்களுடைய அணியில் சில நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். எனவே அவர்களின் சிறந்த மாற்று வீரரை முதலில் நாங்கள் பார்க்க வேண்டும். அடுத்து வரும் வருடங்களையும் கருத்தில் கொண்டு நாங்கள் இந்த முடிவை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement