கடந்த சில ஆண்டுகளாகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ரவிச்சந்திரன் அஸ்வினை நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலத்தின் போது பெரிய தொகைக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்திருந்தது. இதன் காரணமாக மிகப்பெரிய இடைவெளிக்கு பின்னர் பல ஆண்டுகள் கழித்து அஸ்வின் சிஎஸ்கே அணிக்கு திரும்பியிருந்தார். அவரது வருகை ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருத்தது.
இப்போவும் எங்க அப்பா என்னை திட்டுவாரு : ரவிச்சந்திரன் அஷ்வின்
ஆனாலும் இந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக அவர் இதுவரை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏனெனில் வழக்கமாகவே மிகச் சிறப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தும் அஸ்வின் இந்த தொடரில் இதுவரை பெரியளவில் விக்கெட்டுகளை வீழ்த்தாமல் போனது மட்டுமின்றி பவர்பிளேவிலும் ரன்களை வாரி வழங்கி வருகிறார்.
இதன் காரணமாக தற்போது அவருக்கு மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் வெளியிலிருந்து வரும் விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்வேன் என்பது குறித்து பேசியுள்ளார். அந்தவகையில் அவர் கூறுகையில் : எந்த போட்டியில் நான் சரியாக விளையாடவில்லை என்றாலும் என் தந்தை என்னை திட்டிக் கொண்டே தான் இருப்பார்.
இப்போதும் நான் போட்டிகளின் போது தவறு செய்யும் பட்சத்தில் அவர் என்னை திட்டுவார். அதேபோன்று வெளியில் இருந்தும் என்னை பல விமர்சிப்பார்கள் அதையும் நான் ஏற்றுக் கொள்வேன். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நம்மை தரம் தாழ்த்தி பேச வேண்டும் என்று சிலர் ஏதாவது பேசுவார்கள் அதை மட்டும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அது விஷத்தனமானது என்பதை புரிந்து கொள்வேன்.
எனவே நான் பொதுவாக சமூக வலைதளத்தில் இருந்து வரும் கருத்துக்களுக்கு சற்று வெளியே தான் நிற்பேன். மேலும் வெளியே என்ன நடக்கிறது என்பதை யார் பேசினாலும் கவனிக்க மாட்டேன். எப்போதாவது என் நண்பர்கள் நான் விளையாடிய போட்டிக்கு பிறகு எனக்கு மெசேஜ் செய்து : நன்றாக விளையாடு எதை பற்றியும் கவலைப்படாதே என்று தெரிவித்தாலும் அவர்களிடமும் நான் வெளியில் இருக்கும் விடையங்களை தெரிந்து கொள்ள விரும்பவில்லை என்று கூறிவிடுவேன்.
இதையும் படிங்க : 2025 தொடரில் இருந்து வெளியேறிய ருதுராஜ்.. எஞ்சியுள்ள போட்டிகளுக்கு தோனி கேப்டனாக அறிவிப்பு – வெளியான தகவல்
வெளியில் இருந்து வரும் விமர்சனங்களை எல்லாம் மனதில் போட்டு யோசித்தால் அது நமக்கு பாதகமாக மாறும். எனவே எதைப் பற்றியும் கவலைப்படாமல் என்னுடைய உழைப்பை மட்டும் நம்பி செயல்பட்டு வருகிறேன் என அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.



