2024 முடிஞ்ச கதை.. அந்த 2 பேரை அமைதியா வெச்சிருந்தா போதும்.. ஆர்சிபியை சிஎஸ்கே வீழ்த்தும்.. பிளெமிங் பேட்டி

Stephen Fleming
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 28ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் 8வது லீக் போட்டி நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கடந்த வருடம் கடைசிப் போட்டியில் சென்னையை தோற்கடித்த பெங்களூரு அவர்களை தொடரிலிருந்து வெளியேற்றி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

அதே போல இம்முறை சென்னை அணியை அதனுடைய சொந்த மண்ணில் 2008க்குப்பின் தோற்கடிக்க பெங்களூரு அணி தயாராக உள்ளது. குறிப்பாக இம்முறை புதிய கேப்டன் ரஜத் படிதார் தலைமையில் முதல் போட்டியில் கொல்கத்தாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்த பெங்களூரு தங்களதுப் பயணத்தை வெற்றிகரமாக துவங்கியுள்ளது. மறுபுறம் பெங்களூரு அணிக்கு பதிலடி கொடுத்து இரண்டாவது வெற்றியைப் பெற சென்னை அணியும் தயாராக இருக்கிறது.

- Advertisement -

சென்னையின் சவால்:

இந்நிலையில் கடந்த வருடம் ஆர்சிபி அணி தங்களுக்கு வித்தியாசமானப் போட்டியை கொடுத்ததாக சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த தோல்வியைப் பார்க்காமல் இம்முறை பெங்களூருவுக்கு பதிலடி கொடுத்து வெற்றி பெற சென்னை தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். அதற்கு விராட் கோலி, ரஜத் படிதார் ஆகியோரை அமைதியாக வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது பற்றி பிளெமிங் பேசியது பின்வருமாறு. “ஒரு போட்டியை வைத்து எதைப் பற்றியும் கருத்து சொல்ல முடியாது. கடந்த வருடம் ஆர்சிபி – சிஎஸ்கே போட்டி மிகவும் வித்தியாசமாக இருந்தது. இருப்பினும் நாங்கள் கடந்த கால செயல்பாடுகளைப் பார்க்க விரும்பவில்லை. அதே சமயம் பெங்களூரு அணியை பார்க்கும் போது விராட் கோலி அதன் பெரிய அங்கமாக இருக்கிறார்”

- Advertisement -

பிளெமிங் கருத்து:

“அவரையும் தாண்டி மற்ற அணிகளை போல பெங்களூருவும் தங்களது அணியில் நிறையா பலத்தைக் கொண்டுள்ளது. எனவே இம்முறை போட்டி இன்னும் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட போட்டியில் நாங்கள் விராட் கோலி மற்றும் படிதார் ஆகியோரை அமைதியாக வைத்திருந்தால் அது எங்களுக்கு வெற்றி பெற உதவும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: தூக்கியெறிந்த பி.சி.சி.ஐ கையாலே வெகுமதி பெறவுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் – இதுதான் மாஸ் கம்பேக்

முன்னதாக ஐபிஎல் வரலாற்றில் சென்னையும் மும்பையும் 33 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை 21 போட்டிகளில் வென்று பலமான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது. பெங்களூரு 11 போட்டிகளில் வென்றது ஒரு போட்டி மழையால் கை விடப்பட்டது.

Advertisement