ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் அணி மோசமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் திண்டாடி வருகிறது. இந்த வருடம் முதல் போட்டியில் மும்பையை தோற்கடித்த சென்னை அடுத்த 5 போட்டிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்தது. மேலும் தங்களது கோட்டையான சேப்பாக்கத்தில் வரலாற்றில் முதல் முறையாக சென்னை 3 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளது.
முன்னதாக ருதுராஜ் காயத்தை சந்தித்ததால் மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்ற தோனி தலைமையில் சென்னை அசத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொல்கத்தாவுக்கு எதிராக 20 ஓவரில் 103 ரன்களை வெறும் 10.1 ஓவரில் வழங்கி சென்னை படுதோல்வியை சந்தித்தது. அந்தளவுக்கு தற்சமயத்தில் சென்னை மட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
மேஜிக்மேன் கிடையாது:
அதனால் தோனி கேப்டனாக வந்தும் எதுவும் மாறாததால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில் கேப்டனாக வந்ததும் அனைத்தையும் ஒரே நாளில் மாற்றுவதற்கு தோனி ஒன்றும் மேஜிக் மனிதர் கிடையாது என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்பிங் தெரிவித்துள்ளார். அதே சமயம் தொடர் தோல்விகளால் சந்தித்துள்ள மிகப்பெரிய வலியை வெற்றிகளாக மாற்ற உழைத்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
இது பற்றி இன்றைய லக்னோ போட்டிக்கு முன் பிளெமிங் பேசியது பின்வருமாறு. “தோனியின் செல்வாக்கு எப்போது முக்கியமாக இருக்கும். ஆனால் அதற்காக அவர் சூட்சமம் செய்பவர் கிடையாது. அவரிடம் மந்திரக்கோல் இல்லை. மந்திரக்கோலை வைத்து வெற்றியை தன்பக்கம் வருமாறு அவரால் தேய்க்க முடியாது. இல்லையென்றால் அதை முன்பே அவர் செய்திருப்பார்”
வலிகள் வெற்றியாகுமா:
“தோனியுடன் இணைந்து வெற்றியைத் திருப்புவதற்கு நாங்கள் கடினமாக உழைக்கிறோம். நிச்சயமாக எங்கள் இருவரது கிரிக்கெட் வாழ்க்கையிலும் அதிக ஆற்றல் தேவைப்படும் சூழ்நிலையில் ஒன்றாக இருந்துள்ளோம். இச்சமயத்தில் நாங்கள் சிறிய படிகளை பார்த்து 3 வகையான துறையிலும் முன்னேறுவதற்கான வேலைகளைத் தொடர்ந்து செய்து எதிரணிக்குப் போட்டியை கொடுக்கத் தொடங்கும் வழியைக் கண்டறிந்து வருகிறோம்”
இதையும் படிங்க: இனிமேலாச்சும் ரோஹித்தை அவமானப்படுத்தாதீங்க.. பெவிலியனில் இருந்தே ஒற்றை சிக்னலால் வென்ற ஹிட்மேன்
“கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் போட்டியை கொடுக்கத் தவறியதால் நாங்கள் நிறைய வலியைப் பெற்றோம். எனவே அதை சரி செய்வதற்கான உள் ஆன்மாவை தேடும் உணர்வு நிறைய இருக்கிறது. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நிறைய வேலைகள் உள்ளன. நாங்கள் பெருமைமிக்க பிரதிநிதியாக செயல்திறனை வெளிப்படுத்துவது முக்கியம். உத்வேகத்தைப் பெறுவதற்கு எங்களிடம் ஏராளமான காயங்கள் இருக்கின்றன. அவை வார்த்தைகளைப் பற்றியது அல்ல. அது எங்கள் வீரர்கள் முக்கிய தருணங்களைப் பிடித்து, பள்ளம், படிவத்தைக் கண்டுபிடித்து ஊடுருவக்கூடிய எந்த ஒரு பயத்தையும் அசைப்பது பற்றியதாகும்” என்று கூறினார்.



