ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 13ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 27வது போட்டியில் மும்பை 12 ரன்கள் வித்தியாசத்தில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 206 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ரியான் ரிக்கல்டன் 41, சூரியகுமார் யாதவ் 40, திலக் வர்மா 59, நமன் திர் 38* ரன்கள் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய டெல்லி 19 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தங்களது முதல் தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக கருண் நாயர் 89, அபிஷேக் போரேல் 33 ரன்கள் எடுத்தனர். மும்பைக்கு அதிகபட்சமாக கரண் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக 5 கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மாவை கடந்த வருடம் மும்பை கழற்றி விட்டு பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது.
தொடரும் அவமானம்:
அதன் பின் இந்தியாவுக்காக ரோஹித் 2 ஐசிசி கோப்பைகளை வென்றது வேறு கதை. ஆனால் இந்தியாவுக்காக இப்போதும் அவர் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் முழுமையாக விளையாடுகிறார். அப்படிப்பட்ட அவரை ஃபிட்டாக இல்லை என்று கருதும் மும்பை நிர்வாகம் இத்தொடரில் இம்பேக்ட் வீரராக பயன்படுத்தி வருகிறது.
அந்த வகையில் ரோஹித் சர்மாவுக்கு மும்பை அணி அடுத்தடுத்த அவமானங்களை செய்வதாக ரசிகர்கள் ஏற்கனவே அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த சூழ்நிலையில் இம்பேக்ட் வீரராக மும்பை ரோஹித் சர்மாவை பயன்படுத்துவதே தோல்விகளுக்கு காரணம் என்று முன்னாள் வீரர் சஞ்சய் பங்கார் சமீபத்தில் கூறினார். மேலும் ரோஹித் முழுமையாக களத்தில் விளையாடினால் இக்கட்டான நேரத்தில் பாண்டியாவுக்கு ஆலோசனைகளைஜ் கொடுத்து வெற்றியில் உதவுவார் என்றும் அவர் கூறியிருந்தார்.
ஒற்றை சைகையால்:
அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தப் போட்டியில் கருண் நாயர், அபிஷேக், அக்சர் படேல் ஆகியோரை அவுட்டாக்கி மும்பை போராடியது. அப்போதும் ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் – அசுட்டோஸ் சர்மா களத்தில் இருந்ததால் மும்பையின் வெற்றி கேள்வியாகவே இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் 14வது ஓவரில் பெவிலியனில் இருந்த ரோஹித் சர்மா பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதாக உணர்ந்தார்.
எனவே புதிய விதிமுறைப்படி 2வது புதிய பந்தை வாங்குமாறு கரன் சர்மாவுக்கு ரோஹித் சிக்னல் கொடுத்தார். அவருடைய அறிவுரைப்படி இரண்டாவது பந்தை வாங்கிய கரன் சர்மா 14வது ஓவரின் 3வது பந்தில் ஸ்டப்ஸை காலி செய்தார். மேலும் தன்னுடைய அடுத்த ஓவரில் நல்ல ஃபார்மில் இருக்கும் ராகுலையும் கரன் சர்மா அவுட்டாக்கியது மும்பை வெற்றியை உறுதி செய்தது.
இதையும் படிங்க: ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதிலாக சி.எஸ்.கே தேர்வுசெய்து அறிவித்த 17 வயது மாற்றுவீரர்.. யார் இவர்? – விவரம் இதோ
அந்த வகையில் பெவிலியனில் இருந்து கொண்டே ரோஹித் ஒற்றைச் செய்கையால் மும்பையின் வெற்றிக்கு அனுபவத்தால் பங்காற்றி தன்னை சாம்பியன் கேப்டன் என்பதை நிரூபித்தார். அந்த செயலால் சஞ்சய் பங்கர் கூற்றும் நிரூபணமானது. அதைப் பார்க்கும் ரசிகர்கள் இனியாவது ரோஹித்தை இம்பேக்ட் வீரராக களமிறக்கி அவமானப்படுத்தாதீர்கள் என்று மும்பையை சாடுகின்றனர்.



