ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதிலாக சி.எஸ்.கே தேர்வுசெய்து அறிவித்த 17 வயது மாற்றுவீரர்.. யார் இவர்? – விவரம் இதோ

Ruturaj and Ayush Mhatre
- Advertisement -

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் துவங்கியது. இந்த தொடரில் தங்களது முதல் போட்டியை மார்ச் 23-ஆம் தேதி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இந்த தொடரினை அசத்தலாக துவங்கியிருந்தது. இதன் காரணமாக சி.எஸ்.கே அணி இந்த ஆண்டு பலமாக ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதிலாக மாற்றுவீரரை அறிவித்த சி.எஸ்.கே :

ஆனால் அதற்கு அடுத்து நடைபெற்ற நான்கு போட்டிகளில் பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு எதிராக மோசமான தோல்வியை பெற்று முதல் 5 போட்டிகளின் முடிவில் 4 தோல்விகளை பெற்று மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. அவ்வேளையில் தான் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சியுள்ள இந்த தொடரில் இருந்து முற்றிலுமாக வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தோனியின் தலைமையிலான சென்னை அணியானது ஏப்ரல் 11-ஆம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் விளையாடியது. இப்படி மீண்டும் தோனி கேப்டனாக கம்பேக் கொடுத்ததால் சென்னை அணி வெற்றி பாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கொல்கத்தா அணிக்கு எதிராகவும் மோசமான தோல்வியை சந்தித்தது. சி.எஸ்.கே அணி இப்படி தொடர்ச்சியான தோல்விகளை சந்திப்பதற்கு தற்போதைய அணியில் அதிரடியாக விளையாடும் எந்த பேட்ஸ்மேனும் இல்லை என்பதே மிகப்பெரிய காரணமாக பார்க்கப்பட்டது.

ஏற்கனவே சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ஒரே பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் ருதுராஜ் கெய்க்வாடும் இப்படி காயம் காரணமாக வெளியேறியதால் தற்போது சி.எஸ்.கே அணி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில் காயம் காரணமாக வெளியேறிய அவருக்கு பதிலாக தற்போது 17 வயது மும்பை வீரரான ஆயுஷ் மாத்ரேவை மாற்று வீரராக சி.எஸ்.கே அணி அறிவித்துள்ளது. இப்படி அனுபவம் வாய்ந்த வீரருக்கு பதிலாக ஒரு 17 வயது இளம்வீரரை தேர்வு செய்ய என்ன காரணம்? என்பது குறித்த தகவலை ரசிகர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் ஆயுஷ் மாத்ரே குறித்த சில தகவல்களை இங்கு காணலாம். 17 வயதான ஆயுஷ் மாத்ரே மும்பை மாநில அணியின் துவக்க வீரராக விளையாடி வருகிறார். இதுவரை ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 2 சதம் மற்றும் 1 அரைசதம் என 504 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டும் இன்றி லிஸ்ட் ஏ போட்டிகளில் 2 சதம் அடித்துள்ள அவர் 458 ரன்கள் குவித்துள்ளார்.

இதையும் படிங்க : 15-0 தங்களது வரலாற்று சாதனையை தக்கவைத்து அசத்திய மும்பை இந்தியன்ஸ் அணி – விவரம் இதோ

துவக்க வீரராக இருப்பது மட்டுமின்றி பகுதிநேர சுழற்பந்து வீச்சாளராகவும் அவரால் செயல்பட முடியும் என்பதனால் அவரின் திறமையை கருத்தில் கொண்டே சிஎஸ்கே அணி அவரை தேர்வு செய்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டிக்கு முன் அவர் சி.எஸ்.கே அணியுடன் இணைவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement