கவலையே படாதீங்க. அடுத்த மேட்ச்ல அவர் கண்டிப்பா ஆடுவாரு – சி.எஸ்.கே கோச் பிளமிங் உறுதி

Fleming
- Advertisement -

நடப்பு 15-வது ஐபிஎல் தொடரில் இருவரும் ஜாம்பவான் அணிகளான மும்பை மற்றும் சென்னை அணி மிகப் பெரிய சரிவை சந்தித்து உள்ளது என்றே கூறலாம். ஏனெனில் இதுவரை மும்பை அணி தாங்கள் விளையாடியுள்ள 8 போட்டிகளிலும் தோல்வி அடைந்து ஒரு புள்ளியை கூட பெறாமல் புள்ளி பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கிறது. அதை தொடர்ந்து 8 போட்டிகளில் இரண்டு வெற்றியை மட்டுமே பெற்ற சென்னை அணியானது 4 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

CSK vs RCB 2

- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வரும் இவ்விரு அணிகளும் இந்த ஆண்டு புள்ளி பட்டியலில் பின்தங்கி இருப்பதால் இரு அணியைச் சேர்ந்த ரசிகர்களும் வருத்தத்தில் உள்ளனர். அதிலும் குறிப்பாக நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு வெற்றிகளை பெற்றதால் அடுத்தடுத்து இனி சற்று முன்னேறி வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நடைபெற்று முடிந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணியானது 187 ரன்களை குவிக்க அடுத்ததாக சென்னை அணி 188 ரன்களை சேஸிங் செய்து விளையாடியது. ஆனால் இறுதியில் சென்னை அணியால் 176 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்ததால் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ஒரு ஆறுதலாக சென்னை அணியின் அதிரடி ஆட்டக்காரரான ராயுடு 39 பந்துகளில் 78 ரன்கள் அடித்து அசத்தினார்.

ஆனால் இந்த போட்டியின் போது முதலாவதாக பீல்டிங் செய்யும்போது ராயுடு கையில் பலமான அடிபட்டு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் பேட்டிங் செய்வாரா என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் காயத்தினையும் பொருட்படுத்தாது அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் இந்த காயம் காரணமாக அவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் அனைவரது மத்தியிலும் இருந்தது.

- Advertisement -

அதற்கு பதில் கொடுக்கும் விதமாக தற்போது சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ராயுடுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது உண்மைதான். ஆனாலும் அவர் தற்போது நல்ல முறையில் தயாராகி வருகிறார். அவரது உடற்தகுதியில் பெரிய அளவில் பிரச்சனை ஏதும் இல்லை. எனவே சிறிய ஓய்வுக்குப் பிறகு நிச்சயம் அவர் அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று உறுதி செய்துள்ளார்.

இதையும் படிங்க : வீடியோ : மாப்ள்ளைக்கு அவ்ளோ வெறி! பயிற்சியின் போது நாற்காலியை உடைத்த கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர்

ஏற்கனவே தொடர் தோல்விகளால் பலமின்றி காணப்படும் சென்னை அணி இவரும் விளையாடாமல் போனால் முற்றிலும் பலம் இழந்து விடும். ஆனால் அவருக்கு பாதிப்பு ஏதும் இல்லை அடுத்த போட்டியில் அவர் விளையாடுவார் என்று பிளமிங் உறுதி செய்துள்ளதால் இந்த செய்தி தான் சென்னை அணியின் ரசிகர்களுக்கு ஒரு ஆறுதல் தரும் விடயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement