IPL 2023 : சிஎஸ்கே எவ்ளவோ பரவால்ல, உள்ளூர் இந்திய வீரர்களை பார்க்காத ஆர்சிபி – கோப்பை வாங்க திணறும் புள்ளிவிவரம்

RCB
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் தங்களுடைய லட்சிய முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் 5 வெற்றிகளையும் 6 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் தடுமாறுகிறது. தற்போதைய நிலைமையில் அடுத்து வரும் 3 போட்டிகளில் வென்றால் மட்டுமே அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல முடியும் என்ற நிலைமை இருப்பதால் பெங்களூரு ரசிகர்கள் கலக்கத்துடன் காணப்படுகின்றனர். முன்னதாக 2008இல் ஐபிஎல் துவங்கப்பட்ட போது உள்ளூர் நட்சத்திரமான ராகுல் டிராவிட் தலைமையில் களமிறங்கிய பெங்களூரு 2009இல் மற்றொரு உள்ளூர் ஜாம்பவான் அனில் கும்ப்ளே தலைமையில் ஃபைனல் வரை சென்று தோற்றது.

அதை தொடர்ந்து டேனியல் வெட்டோரி தலைமையில் 2011 சீசனில் மீண்டும் ஃபைனல் வரை தோற்ற அந்த அணிக்கு 2013இல் டெல்லியை சேர்ந்த விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் கிறிஸ் கெயில், ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற தரமான வீரர்கள் அமைந்தும் ஏதோ ஒரு கட்டத்தில் சொதப்புவதை வழக்கமாக வைத்திருந்த பெங்களூரு 2016 ஃபைனலில் வாயில் சுவைக்க வேண்டிய வெற்றியை ஹைதராபாத்துக்கு தாரை பார்த்தது.

- Advertisement -

நோ உள்ளூர் வீரர்கள்:
அது மட்டுமல்லால் ஒரு சில தோல்விகளை சந்தித்தால் அதற்காக பதற்றமடைந்து அடுத்த போட்டியில் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் நீக்குவது அல்லது அடுத்த சீசனில் கழற்றி விடுவது ஆகியன அந்த அணி கோப்பை வெல்ல முடியாமல் இருப்பதற்கு மறைமுக காரணமாக அமைந்தன. அத்துடன் பேட்ஸ்மேன்கள் போராடி அடிக்கும் ரன்களை பவுலர்கள் மறுபுறம் வாரி வழங்குவது இப்போதும் அந்த அணியின் பிரச்சனையாக இருக்கிறது.

மொத்தத்தில் விராட் கோலி கேப்டனாக இருக்கும் வரை கோப்பையை தொட முடியாது என்ற விமர்சனங்களால் பதவி விலகிய அவருக்கு பின் பொறுப்பேற்ற டு பிளேஸிஸ் தலைமையிலும் பெங்களூரு கிட்டத்தட்ட அதே பழைய பஞ்சாங்கத்தை போல் விளையாடி வருகிறது. முன்னதாக பெங்களூரு அணியில் விராட் கோலி, டீ வில்லியர்ஸ் மற்றும் தமக்கு மட்டுமே பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் இதர வீரர்கள் அந்த அணிக்காக விளையாடுகிறோம் என்ற உணர்வுடன் இல்லாமல் இருந்ததாக ஜாம்பவான் கிறிஸ் கெயில் இத்தொடரின் துவக்கத்தில் கூறியது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

- Advertisement -

அப்படி ஐபிஎல் துவங்கப்பட்ட 2008 முதல் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி 7000+ ரன்களை அடித்து அதிக ரன்கள் குவித்தவராக சாதனை படைத்துள்ளார். ஆனால் அவரை தவிர்த்து கடந்த 16 வருடங்களில் அந்த அணிக்காக விளையாடிய எந்த இந்திய வீரரும் தொட்டாலே சிக்சர்கள் பறக்கக்கூடிய சின்னசாமி மைதானத்தில் பெரும்பாலான போட்டிகளில் விளையாடியும் 1000 ரன்கள் கூட அடித்ததில்லை என்று சமீபத்தில் கூறிய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இது இந்திய வீரர்கள் மீது பெங்களூரு அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்து ஆதரவு கொடுக்காததை காட்டுவதாக மிகப்பெரிய தவறை சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் கூறுவது போல் புள்ளி விவரத்தை புரட்டிப் பார்த்தால் வரலாற்றில் தனி ஒருவனாக விராட் கோலி 7044 ரன்களை அடித்துள்ள நிலையில் வேறு யாருமே 1000 ரன்கள் கூட அடித்ததில்லை. அவருக்கு அடுத்தபடியாக ராகுல் டிராவிட் 898, படிக்கல் 884, பார்த்தீவ் பட்டேல் 731, தினேஷ் கார்த்திக் 611*, மந்திப் சிங் 597, ராபின் உத்தப்பா 549, சௌரப் திவாரி 487, மயங் அகர்வால் 433, மனிஷ் பாண்டே 417, கேஎல் ராகுல் 417, ரஜத் படிதார் 404*, யுவராஜ் சிங் 376 என டாப் 12 பேட்ஸ்மேன்கள் சேர்ந்து வெறும் 6084 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர்.

- Advertisement -

இதிலிருந்து பெங்களூரு நிர்வாகம் பெரும்பாலும் வெளிமாநில, வெளிநாட்டு வீரர்களுக்கே அதிக வாய்ப்பு கொடுப்பது தெரிவதால் எப்படி கோப்பை வெல்ல முடியும் என்று ரசிகர்கள் வினவுகின்றனர். ஆரம்பத்தில் தரமான உள்ளூர் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஐபிஎல் நாளடைவில் வெளிநாட்டு மற்றும் வெளி மாநில வீரர்களை வாங்கி எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.

இதையும் படிங்க:IPL 2023 : காலை பிடிக்கிறத தவிர்த்து சரவெடியாக விளையாடும் அவரை நிறுத்த வேற வழியில்ல – இந்திய வீரரை பாராட்டிய ஜஹீர் கான்

அந்த வகையில் தற்போது பெயரில் மட்டும் தமிழை வைத்துக்கொண்டு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பளிக்காத சென்னை கூட அஸ்வின், முரளி விஜய் போன்றவர்கள் வளர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால் பெங்களூரு அணியில் கர்நாடகாவை சேர்ந்த வீரர்கள் வாய்ப்பு பெற்று பெரிய அளவில் வளர்ந்ததாக எந்த புள்ளிவிவரமும் இல்லை.

Advertisement