IPL 2023 : காலை பிடிக்கிறத தவிர்த்து சரவெடியாக விளையாடும் அவரை நிறுத்த வேற வழியில்ல – இந்திய வீரரை பாராட்டிய ஜஹீர் கான்

Zaheer
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் மும்பை ஆரம்பத்தில் சில தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கீழ் வரிசைக்கு தள்ளப்பட்டது. குறிப்பாக பவுலர்கள் ரன்களை வாரி வழங்கிய நிலையில் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சுமாராக செயல்பட்டதால் கடந்த வருடம் புள்ளி பட்டியலில் முதல் முறையாக கடைசி இடத்தை பிடித்த மும்பை இந்த வருடமும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவதில்லை என அந்த அணி ரசிகர்களே கவலையடைந்தனர்.

- Advertisement -

ஆனால் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு எதிரான கடந்த போட்டியில் தலா 215 ரன்களை வெறித்தனமாக துரத்தி வென்ற மும்பை பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் 200 ரன்களை 16.3 ஓவரிலேயே எட்டுப்பிடித்து 21 பந்துகளை மீதம் வைத்து ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 200 ரன்களை துரத்திய அணி என்ற சாதனை படைத்தது. அதனால் அதிக ரன் ரேட் பெற்ற அந்த அணி நேரடியாக 8வது இடத்திலிருந்து புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. அதற்கான அனைத்து பாராட்டுக்களும் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவை சேரும் என்றே சொல்லலாம்.

வேற வழி இல்ல:
இதே மும்பை அணிக்காக அதிரடியாக விளையாடி கடுமையாக போராடி 30 வயதில் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் டி20 கிரிக்கெட்டில் எதிரணி எப்படி பந்து வீசினாலும் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே மைதானத்தில் நாலாபுறங்களிலும் சரமாரியாக அடித்து நொறுக்கி பெரிய ரன்களைக் குவித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து லேட்டஸ்ட் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் சாதனை படைத்தார். குறிப்பாக கற்பனை செய்ய முடியாத வித்தியாசமான ஷாட்களால் எதிரணியை அடித்து துவைத்ததால் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அனைவரது பாராட்டுகளைப் பெற்ற அவர் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டாகி தடுமாறினார்.

SUryakumar Yadav 112

அதன் தாக்கம் இத்தொடரின் ஆரம்ப கட்டத்தில் எதிரொலித்தாலும் 55 (29), 66 (31), 26 (22) என சமீபத்திய போட்டிகளில் அதிரடியாக செயல்பட்டு ஃபார்முக்கு திரும்பிய அவர் பெங்களூருவுக்கு எதிராக உச்சகட்டமாக 7 பவுண்டரி 6 சிக்சருடன் 83 (35) ரன்களை விளாசி தன்னுடைய அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்து மும்பையை ராக்கெட் வேகத்தில் 3வது இடத்திற்கு முன்னேற்றினார். குறிப்பாக அந்த போட்டியில் எப்படி போட்டாலும் அடிக்கிறார் என்ற வகையில் செயல்பட்ட சூரியகுமார் யாதவ் கம்ப்யூட்டரில் விளையாடுவதை போல் உலகின் மிகச்சிறந்த டி20 பேட்ஸ்மேனுக்கு அடையாளமாக மிரட்டியதாக முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மனதார பாராட்டினார்.

- Advertisement -

அதனால் நல்ல பார்மில் இருக்கும் போது அவரை அவுட் செய்வது அசாத்தியமானதாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சூரியகுமாரை அதிரடியாக விளையாட விடாமல் நிறுத்துவதற்கு ஆலோசனை தெரிவிக்குமாறு இந்திய ஜாம்பவான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜஹீர் கானிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவருடைய பேட்டையும் காலையும் அடிக்காமல் பிடிப்பதை தவிர்த்து வேறு வழியில்லை என்று கலகலப்பாக தெரிவித்த அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்ருமாறு.

Zaheer

“பவுலர்கள் அவருடைய கால்களை பிடிக்க வேண்டும் அல்லது அடிக்க விடாமல் பேட்டை பிடித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர் அந்தளவுக்கு பேட்டிங் செய்கிறார். இந்த சீசனில் ஆரம்பத்தில் தடுமாறிய அவர் ஃபார்முக்கு திரும்பியதும் முன்பை விட சிறந்தவராக முன்னேறியுள்ளார். அது நிச்சயமாக பவுலர்களுக்கு நல்ல செய்தியாக இருக்காது. டி20 கிரிக்கெட்டில் அவர் விளையாடும் அணுகுமுறையும் பேட்டிங்கையும் நிறுத்துவதற்கு எந்த வகையான ஃபீல்டிங் செட்டப்பும் உதவி செய்யாது”

இதையும் படிங்க:KKR vs RR : கொல்கத்தாவின் கனவை உடைத்த ஜெய்ஸ்வால் – ராஜஸ்தான் மாஸ் வெற்றி, மும்பைக்கு மீண்டும் நெருக்கடி

“குறிப்பாக ஒவ்வொரு முறையும் அவருக்கு எதிராக ஆஃப் சைட் திசையில் 4 ஃபீல்டர்களை நிறுத்தும் பவுலர்கள் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பகுதியில் வீசி அதிரடியை தடுக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அதையும் உடைக்கும் சூரியகுமார் பவுண்டரிகளை பறக்க விடுகிறார். அதனால் உங்களால் அவரை எளிதாக தடுத்து நிறுத்த முடியாது” என்று கூறினார்.

Advertisement