தடையில் இருந்து மீண்ட என் வாழ்நாள் லட்சியம் இதுமட்டும் தான் – ஸ்ரீசாந்த் ஓபன் டாக்

Srisanth
- Advertisement -

ஐபிஎல் போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக ஸ்ரீசாந்த் இருக்கு பிசிசிஐ வாழ்நாள் தடையை விதித்தது. அதனை தொடர்ந்து அவர் மேல்முறையீடு செய்ததன் காரணமாக உச்சநீதிமன்றம் மார்ச் 15ஆம் தேதி அந்த தடையை நீக்கியது.

Srisanth

- Advertisement -

அத்துடன் ஸ்ரீசாந்த்க்கு எவ்வளவு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை பிசிசிஐ ஓய்வுபெற்ற அதிகாரி நீதிபதி டீகே ஜெயின் மூலம் மூன்று மாதத்திற்குள் முடிவு செய்யப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி ஸ்ரீசாந்த்திற்கான தண்டனை ஏழு ஆண்டுகள் என நீதிபதி டி கே ஜெயின் நேற்று அறிவித்தார். அத்துடன் அடுத்த ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் அவர் மீதான தடை முடிவுக்கு வரும் என்றும் கூறினார். அதன் பிறகு அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியும் என்றும் தெரிவித்தார்கள்.

இந்நிலையில் ஸ்ரீசாந்த் தனது தடை விலகல் பற்றி பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியதாவது : டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்துவதே என்னுடைய வாழ்நாள் லட்சியம் என்று கூறினார். மேலும் என் மீதான தடை காலம் குறைக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சி எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி அவர்கள் பிரார்த்தனை இன்று பலித்தது.

Sreesanth 1

இந்த வருடம் எனக்கு 36 வயது அடுத்த வருடம் 37 வயதாகும். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 87 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன். 100 டெஸ்ட் விக்கெட் எடுப்பதே எனது லட்சியம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு திரும்புவேன் என எனக்கு நம்பிக்கை உள்ளது. விராட் கோலி தலைமையில் விளையாட எனக்கு எப்போதும் விருப்பம் உண்டு என்றும் கூறினார்.

Advertisement