தோனியே எதிரில் நின்றாலும் நான் சி.எஸ்.கே வை தோற்கடிப்பேன் – ஸ்ரீசாந்த் பேட்டி

Srisanth
- Advertisement -

கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக ஸ்ரீசாந்த் ஆயுட்கால தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மேல்முறையீடு செய்த வழக்கில் தற்போது முடிவு கிடைத்துள்ளது. அதன்படி அவருடைய ஆயுட் காலம் தடை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

Srisanth

- Advertisement -

இதனால் அடுத்த வருடம் 2020 செப்டம்பர் மாதம் அவர் மீண்டும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் 87 விக்கெட்டுக்களை வீழ்த்திய ஸ்ரீசாந்த் மேலும் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினால் 100 விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்பதனால் அதனை மட்டும் தனது லட்சியமாகக் கொண்டு மீண்டும் நான் விராட் கோலி அணியில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆசைப்படுகிறேன் என்று வெளிப்படையாகக் கூறினார்.

இந்நிலையில் ஸ்ரீசாந்த் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது : எப்பொழுதும் நான் சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடி வெற்றிபெற விரும்புகிறேன். ஏனெனில் எனக்கு தோனி மற்றும் ஸ்ரீனிவாசன் மீதெல்லாம் வெறுப்பு கிடையாது. மஞ்சள் நிறம் எனக்கு சுத்தமாக பிடிக்காது எனவே நான் சிஎஸ்கே அணிக்கு எதிராகவும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் பொழுது ஆக்ரோஷமாக விளையாடுவேன். இதுவே நான் சிஎஸ்கே அனைத்து எதிர்த்து விளையாட காரணம்.

CSKShop

மேலும் மஞ்சள் நிறம் எனக்கு முற்றிலும் பிடிக்காது என்பதால் ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணியை வீழ்த்த விரும்புகிறேன். என் குடும்பத்தாரும் நண்பர்களும் நான் மீண்டு வந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் நான் நிச்சயம் அதனை நிறைவேற்றுவேன் என்று ஸ்ரீ சாந்த் பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement