கங்குலி என்னை அழைத்து இந்த சிறப்பு பயிச்சி அளித்ததாலே நான் சிறப்பான பந்துவீச்சாளராக மாறினேன் – இந்திய வீரர் புகழாரம்

- Advertisement -

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியிலும், 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த முன்னணி வீரர் ஆவார். 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது மேட்ச் பிக்ஸிங் வழக்கில் கைது செய்யப்பட்டதால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. தற்போது நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டாலும் கிரிக்கெட் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Srisanth 1

- Advertisement -

2005 முதல் 2011 ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் 2006 ஆம் ஆண்டு இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய அனுபவம் குறித்து தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் ராகுல் டிராவிடின் தலைமையிலான இந்திய அணி ஜோகனஸ்பர்க் இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை வென்றது. அந்த டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஸ்ரீசாந்த் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் தனது சிறப்பான பந்து வீச்சுக்கு காரணம் யார் என்று இந்தப் பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி ஸ்ரீசாந்த் குறிப்பிடுகையில் : எனக்கு அந்த சம்பவத்தை இன்னும் ஞாபகப் படுத்த முடியும். அந்த டெஸ்ட் தொடருக்கு முன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினோம்.

Srisanth 2

அப்போது கங்குலி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய நேரம் பயிற்சியை தொடங்குவதற்கு முன் கங்குலி என்னை அழைத்து வலைப்பயிற்சியின் போது அவருக்கு பந்து வீச கூறினார். அந்த நேரத்தில் நான் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சிறப்பாக பந்து வீசிய கிடையாது. நீண்ட நேரம் கங்குலிக்கு பந்து வீசியது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.

- Advertisement -

அந்த நீண்ட நேர பயிற்சியினால் நான் தென் ஆப்பிரிக்க அணி இடதுகை பேட்ஸ்மேன் எதிராக சிறப்பாக வீசியதை நீங்கள் கவனித்திருக்க முடியு.ம் அதற்கு காரணம் யாதெனில் கங்குலிக்கு நான் அவ்வளவு நேரம் பந்துவீசி செய்த பயிற்சியே இந்த பயிற்சியின் மூலம் ஸ்மித்திற்கு எதிராக சிறப்பாக பந்து வீசினேன்.மேலும் ஒவ்வொரு முறையும் பந்துவீசிய பின் மிட் ஆன் அல்லது மிட் ஆப் திசையில் நிற்கும் சச்சினிடம் செல்வேன்.

Srisanth-1

அவர் எனக்கு சில ஆலோசனைகளை வழங்குவார் இவர்கள் இருவரும் கொடுத்த அந்த உத்வேகம் மற்றும் ஆலோசனையுமே அந்த தொடரில் நான் சிறப்பாக பந்துவீச காரணமாக அமைந்து என் திறனை முன்னேற்றி என்னை சிறப்பாக செயல்பட வைத்தது என்று ஸ்ரீசாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement