மீண்டும் கிரிக்கெட் விளையாட இருக்கும் சூதாட்ட நாயகன் ஸ்ரீசாந்த் தண்டனை நீக்கப்பட்டது – விவரம் இதோ

Srisanth
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஸ்ரீசாந்த். கடந்த 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற அணியில் ஸ்ரீசாந்த் இடம்பெற்றிருந்தார். தோனிக்கு மிக நெருக்கமாக இருந்த இவர் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பான பந்துவீச்சை அளித்து வந்தார்.

Srisanth 2

- Advertisement -

இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதால் அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆயுட்கால தடை விதிக்கப்பட்டார். இதனால் இனிமேல் கிரிக்கெட்டை விளையாட முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்ட ஸ்ரீசாந்த் தனது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார்.

தற்போது அந்த மேல்முறையீடு காண முடிவு கிடைத்துள்ளது. அதன்படி ஆயுட்கால தடை நீக்கப்பட்டு அவருக்கு தண்டனை காலமாக ஏழு ஆண்டுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கணக்கிட்டு பார்த்தால் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி 2013 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்ட ஸ்ரீசாந்த் அடுத்த வருடம் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் தடை முடிவடைகிறது.

Sreesanth 1

எனவே அடுத்த ஆண்டு ஸ்ரீசாந்த் மீண்டும் கிரிக்கெட் விளையாட திரும்பும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் தற்போது ஸ்ரீசாந்த்க்கு வயது 36 அடுத்த வருடம் 37 ஆக இருக்கும். எனவே அவர் மீண்டும் அணிக்கு திரும்புவது இயலாத காரியம் என்றாலும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடமுடியும். இந்திய அணிக்காக 2005 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஸ்ரீசாந்த் அறிமுகமானார். மொத்தம் 53 ஒரு நாள் போட்டிகளிலும் 27 டெஸ்ட் போட்டிகளிலும் மற்றும் 10 டி20 போட்டியிலும் இந்திய அணிக்காக ஸ்ரீசாந்த் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement