என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வர தினேஷ் கார்த்திக் தான் காரணம் – சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீசாந்த்

Sri-santh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக பிசிசிஐ-யால் ஆயுட்கால தடை விதிக்கப்பட்டார். அதன்பிறகு ஸ்ரீசாந்த் தற்போது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கில் மீண்டும் வெற்றி பெற்று இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளார். இருந்தாலும் தற்போது 36 வயதாகும் அவருக்கு கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது என்று கூறலாம்.

Srisanth

- Advertisement -

இந்நிலையில் 2013ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நான் இடம்பெறாததுக்கு காரணம் தினேஷ் கார்த்திக் தான் என்றும் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வர அவரும் ஒரு காரணம் என்று ஸ்ரீசாந்த் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். மேலும் அது குறித்து ஸ்ரீசாந்த் கூறுகையில் :

ஸ்ரீனிவாசனை நான் திட்டியதாக தினேஷ் கார்த்திக் அவரிடம் சென்று சொல்லி இருக்கிறார். அதனால் சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான அணியில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. உத்தேச அணியில் என் பெயர் இடம்பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் தினேஷ் கார்த்திக் அவ்வாறு சொன்னதால் என் இடம் பறிக்கப்பட்டது. இதை என்னால் மன்னிக்க முடியாது முடியாது என்று ஸ்ரீசாந்த் கூறினார். மேலும் அடுத்த முறை தினேஷ் கார்த்திக் கேரளாவுக்கு விளையாட வரும் போது என்ன நடந்தது என்பது அவருக்கு தெரியும் என்றும் கடவுள் அவரை ஆசீர்வதிப்பார் என்றும் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் பதிலளிக்கையில் : ஸ்ரீசாந்த் என்ன கூறுகிறார் என்பதை நான் அறிந்தேன். அவர் அணியில் இடம் பெறாததற்கு நான் காரணம் இல்லை இது குறித்து நான் என்ன பதில் அளித்தாலும் அது சிறுபிள்ளைத்தனமாக இருக்கும் என்றும் தினேஷ் கார்த்திக் பதிலளித்து குறிப்பிடத்தக்கது.

Advertisement