தோனி எங்களுக்கு ஓகே. ஆனா இவர் சி.எஸ்.கே அணியில இருப்பாரான்னு சொல்ல முடியாது – சி.எஸ்.கே ஓனர்

Srinivasan
Advertisement

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற பதிமூன்றாவது ஐபிஎல் தொடரில் லீக் சுற்று போட்டிகளில் முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கே அணியானது இம்முறை அங்கு நடைபெற்ற 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரை கைப்பற்றி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சாம்பியன் கோப்பையை தற்போது இந்தியா கொண்டு வந்து தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் வைத்து சென்னை அணி நிர்வாகம் பூஜை செய்துள்ளனர்.

srini

இந்த பூஜையில் அணியின் உரிமையாளர் சீனிவாசன், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் தலைவர் குருநாத் மற்றும் தேவஸ்தான நிர்வாகி சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஐபிஎல் கோப்பை ஏழுமலையான் முன்பு வைத்து பூஜை செய்யப்பட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அணியின் உரிமையாளர் சீனிவாசன் பேசுகையில் : எங்கள் நிறுவனம் திறக்கப்பட்டு 75 ஆவது வருடத்தில் கோப்பையை வென்றது மகிழ்ச்சி.

- Advertisement -

கடந்த ஆண்டு தோல்வியடைந்ததால் இம்முறை கோப்பையை கைப்பற்ற முடியுமா ? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் தோனி நிச்சயம் சென்னை அணி வெற்றி பெறும் என்று என்னிடம் நம்பிக்கை தெரிவித்தார். தற்போது அதே போல நடந்து உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் தோனி ஆலோசகராக பயணித்ததால் அவர் நிச்சயம் நாடு திரும்பியவுடன் சென்னைக்கு வருவார். அதன் பின்னர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பெரிய பாராட்டு விழா நடைபெற உள்ளது.

srini 1

அந்த பாராட்டு விழாவின்போது வெற்றிக் கோப்பையை தோனி முதல்வரிடம் கொடுப்பார். அதுமட்டுமின்றி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த பாராட்டு விழாவில் சென்னை அணியின் சில வீரர்களும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி இடம் பெறுவாரா ? என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர் :

- Advertisement -

raina 1

சிஎஸ்கே இல்லாமல் எம்.எஸ் தோனி கிடையாது. எம்.எஸ் தோனி இல்லாமல் சிஎஸ்கே கிடையாது என்று கூறினார். இவரின் இந்த பதில் மூலம் அடுத்த ஆண்டும் தோனி விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியில் ரெய்னா தக்கவைக்க படுவாரா ? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீனிவாசன் கூறுகையில் :

இதையும் படிங்க : பாண்டியா விஷயத்துல என்னதான் நடக்குது. அவரு இனிமே வேணாம் – பயிற்சி போட்டிக்கு பிறகு ரசிகர்கள் கோபம்

தற்போது ரெய்னா இடம் குறித்து எந்தவித பதிலும் கூற முடியாது என்று ரெய்னாவின் விவகாரம் குறித்து அதிரடியான தகவலை தெரிவித்தார். இதன் காரணமாக நிச்சயம் அடுத்த ஆண்டு ரெய்னா சென்னையில் இருந்து வெளியேற்றப்படவும், ஏலத்தில் விடப்படவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ரெய்னா இனி ஐபிஎல்லில் ஏதாவது ஒரு அணியில் இடம் பெறுவது மிகவும் கடினம் என்றே தெரிகிறது.

Advertisement