23 வருடத்துக்கு பின் அரிய போட்டி.. 6 நாட்கள் கொண்ட டெஸ்டில் விளையாடும் இலங்கை.. காரணம் என்ன?

Srilanka
- Advertisement -

இலங்கை கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக டி20 தொடரில் தோற்றாலும் ஒருநாள் தொடரில் 27 வருடங்கள் கழித்து வென்றது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு சென்றுள்ள அந்த அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள அந்தத் தொடரை முடித்துக் கொண்டு இலங்கை தாயகம் திரும்புகிறது.

அதன் பின் மீண்டும் தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை விளையாட உள்ளது. இந்நிலையில் அந்த தொடருக்கான அட்டவணையை இலங்கை வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் படி முதல் போட்டி செப்டம்பர் 18 – 23, 2வது போட்டி செப்டம்பர் 26 – 30 ஆகிய தேதிகளில் இலங்கையின் கால்லே நகரில் நடைபெற உள்ளது.

- Advertisement -

6 நாட்கள்:

ஆனால் கால்லே நகரில் துவங்கும் அத்தொடரின் முதல் போட்டி 6 நாட்கள் நடைபெறும் என்று இலங்கை வாரியம் அறிவித்துள்ளது. பொதுவாகவே டெஸ்ட் போட்டிகள் 5 நாட்கள் மட்டுமே நடைபெறுவது வழக்கமாகும். இருப்பினும் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி இலங்கையில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அந்நாட்டில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அன்றைய நாள் நடைபெற உள்ள ஆட்டத்திற்கு விடுப்பு கொடுக்கப்படுவதாக இலங்கை வாரியம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக 23 வருடங்கள் கழித்து இலங்கையில் மீண்டும் 6 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி அரிதாக நடைபெற உள்ளது. கடைசியாக கடந்த 2001ஆம் ஆண்டு முழு பௌர்ணமி தினத்தின் (போயா டே) காரணமாக கொழும்புவில் இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் 6 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடின.

- Advertisement -

23 வருடத்துக்கு பின்:

அத்துடன் உலக அளவில் கடைசியாக கடந்த 2008ஆம் ஆண்டு வங்கதேச பாராளுமன்ற தேர்தல் காரணமாக தாக்காவில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதிய போட்டி 6 நாட்கள் நடைபெற்றது. அதற்கு முன்பாகவே இருபதாம் நூற்றாண்டில் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் விடுமுறை என்பதால் இங்கிலாந்தில் பல போட்டிகள் 6 நாட்களாக நடைபெற்றது.

இதையும் படிங்க: யுவராஜ் சொன்னாரு.. 40 நிமிடம் வார்னேவிடம் பேசியதும் அந்த மாற்றத்தை சந்திச்சேன்.. பியூஸ் சாவ்லா பேட்டி

அதே போன்ற போட்டி பல வருடங்கள் கழித்து மீண்டும் இலங்கையில் நடைபெற உள்ளது. அந்த தொடருக்கு முன்பாக இந்தியாவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து விளையாடுகிறது. அதில் விளையாடிய பின்பே இலங்கைக்குச் சென்று நியூசிலாந்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement