யுவராஜ் சொன்னாரு.. 40 நிமிடம் வார்னேவிடம் பேசியதும் அந்த மாற்றத்தை சந்திச்சேன்.. பியூஸ் சாவ்லா பேட்டி

Piyush Chawla 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் பியூஸ் சாவ்லா 2006 – 2012 வரையிலான காலகட்டங்களில் சுழல் பந்து வீச்சாளராக விளையாடினார். அந்த வாய்ப்பில் 3 டெஸ்ட் மற்றும் 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர் 2007 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். அதே போல 2011 உலகக் கோப்பையிலும் கணிசனமான போட்டிகளில் விளையாடிய அவர் சாம்பியன் பட்டம் வென்றார்.

மேலும் ஐபிஎல் தொடரிலும் 2008 முதல் இப்போது வரை விளையாடி வரும் அவர் 192 போட்டிகளில் 192 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ஆரம்பக் காலத்தில் தாம் சுமாராக விளையாடிய போது ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே முக்கிய ஆலோசனை கொடுத்ததாக பியூஸ் சாவ்லா கூறியுள்ளார்.

- Advertisement -

வார்னேவின் அறிவுரை:

குறிப்பாக பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணிக்காக மைக் ஹசி ஒரு போட்டியில் அதிரடியான சதமடித்தார். அப்போட்டியில் மைக் ஹசியிடம் அடி வாங்கிய பியூஸ் சாவ்லா பெரிய பின்னடைவை சந்தித்தார். அப்போது பஞ்சாப் அணியின் கேப்டன் யுவராஜ் சிங் ராஜஸ்தானின் கேப்டனாக இருந்த ஷேன் வார்னேவிடம் தம்மை அழைத்துச் சென்றதாக சாவ்லா கூறியுள்ளார்.

அந்த சந்திப்பில் ஷேன் வார்னே சொன்ன ஆலோசனை வார்த்தைகள் நாளடைவில் ஐபிஎல் தொடரில் அசத்துவதற்கு உதவியதாக சாவ்லா கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எங்களுடைய முதல் போட்டியில் சிஎஸ்கே 230+ ரன்கள் அடித்தது. அப்போட்டியில் ஒரு ஓவர் வீசிய எனக்கு எதிராக 20 ரன்கள் அடித்தார்கள். அதன் பின் ஜெய்ப்பூரில் ராஜஸ்தானுக்கு எதிராக நாங்கள் விளையாடினோம்”

- Advertisement -

சிறந்த பவுலராக உணர்வு:

“அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த எங்களது அணிக்கு நான் பேட்டிங்கில் 11 – 12 பந்துகளில் 24 ரன்கள் அடித்தேன். ஆனால் பந்து வீச்சில் மீண்டும் 2 ஓவரில் 30 ரன்கள் கொடுத்தேன். அதனால் டி20 எனக்கு செட்டாகாது என்று நினைத்தேன். அப்போது 18 வயதிலிருந்த நான் அதற்காக மிகவும் கவலைப்பட்டேன். அப்போது என்னை ஜாம்பவான் ஷேன் வார்னேவிடம் கேப்டன் யுவராஜ் அழைத்துச் சென்றார்”

இதையும் படிங்க: வார்னே எங்க குடும்பத்தில் ஒருத்தர் மாதிரி.. அந்த வெற்றிக்காக காத்திருக்கேன்.. குல்தீப் உருக்கமான பேட்டி

“வார்னே அறைக்குச் சென்ற நான் பேசத் துவங்கினேன். இருப்பினும் அவர் பேசிய ஆங்கிலம் எனக்கு சரியாகப் புரியவில்லை என்னால் நன்றாக பேசவும் முடியவில்லை. இருப்பினும் முடிந்தளவுக்கு அவர் சொன்னதை நான் புரிந்து கொண்டேன். ஆனால் 40 நிமிடங்கள் கழித்து அவரது அறையிலிருந்து வெளியே வந்த பின் என்னை விட சிறந்த பவுலர் என்பது போல் உணர்ந்தேன். அந்தளவுக்கு நிறைய அவர் சொன்ன நிறைய விஷயங்கள் கிரிக்கெட்டை பற்றி புரிந்துகொள்ள எனக்கு உதவியது” என்று கூறினார்.

Advertisement