வார்னே எங்க குடும்பத்தில் ஒருத்தர் மாதிரி.. அந்த வெற்றிக்காக காத்திருக்கேன்.. குல்தீப் உருக்கமான பேட்டி

Kuldeep yadav
- Advertisement -

ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே வரலாற்றின் மகத்தான ஸ்பின்னராக போற்றப்படுகிறார். ஏனெனில் சுழலுக்கு சாதகமற்ற ஆஸ்திரேலிய மண்ணில் பிறந்த அவர் தன்னுடைய அற்புதமான திறமையால் பந்தை அபாரமாக சுழற்றி உலகின் பல டாப் பேட்ஸ்மேன்களை திணறடித்த பெருமைக்குரியவர். அத்துடன் 20ஆம் நூற்றாண்டின் சிறந்த பந்தை வீசிய அவர் படைத்த உலக சாதனையை யாராலும் மறக்க முடியாது.

அந்த வகையில் சுழலுக்கு சாதகமற்ற ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் அசத்திய காரணத்தால் முத்தையா முரளிதரனை விட வார்னே சிறந்த ஸ்பின்னராக போற்றப்படுகிறார். இருப்பினும் அப்படிப்பட்ட மகத்தான அவர் 50 வயதிலேயே இயற்கை எய்தியது ரசிகர்களுக்கு சோகமாக அமைந்தது. ஆனாலும் அவர் பல இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாக திகழ்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

மகத்தான வார்னே:

இந்நிலையில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் தனிப்பட்ட முறையில் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே மெல்போர்ன் மைதானத்திற்கு சென்ற அவர் வெளியே உள்ள ஷேன் வார்னே சிலையுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு நினைவை பகிர்ந்துள்ளார். அத்துடன் தமது ரோல் மாடலான வார்னேவை தம்முடைய குடும்பத்தில் ஒருவரைப் போல் கருதுவதால் அவரை நினைக்கும் போது தமக்கும் சோகம் ஏற்படும் என்று குல்தீப் தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்ததாக வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2024/25 பார்டர் – கவாவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அந்தத் தொடரில் விளையாடி இந்தியாவுக்காக வெற்றியை பெற்றுக் கொடுக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் குல்தீப் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

குடும்பத்தில் ஒருவர்:

“ஷேன் வார்னே எனது ரோல் மாடல். அவருடன் எனக்கு வலுவான இணைப்பு இருந்தது. வார்னேவை பற்றி சிந்திக்கும் போது இப்போதும் எனக்கு உணர்ச்சி வசம் ஏற்படும். குறிப்பாக அவரை நினைத்தால் எனது குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்ற உணர்வு ஏற்படும். ஆஸ்திரேலிய வாரியத்தின் தலைமைச் செயலகம் மற்றும் மெல்போர்ன் மைதானத்தில் இருப்பது சிறப்பாக இருக்கிறது”

இதையும் படிங்க: 200 ரன்ஸ்.. இந்தியா மாதிரியே இங்கிலாந்தையும் இலங்கை தெறிக்க விடப் போறாங்க.. மைக்கேல் வாகன் கணிப்பு

“பார்டர் – காவாஸ்கர் கோப்பை தொடருக்காக நான் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். இந்த வருடம் நாம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே மகத்தான போட்டியை எதிர்பார்க்கிறோம். இந்திய ரசிகர்கள் எங்களுடைய அணிக்கு உலகம் முழுவதிலும் எங்கு சென்றாலும் ஆதரவு கொடுப்பார்கள். அதே போல பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் குறிப்பாக பாக்ஸிங் டே போட்டியில் அவர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள்” என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement