13 ஆண்டுகால சாதனையை இந்திய அணிக்கு எதிராக நிகழ்த்தி அசத்திய இலங்கை அணி – விவரம் இதோ

Hasaranga-1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களை மட்டுமே குவித்தது.

INDvsSL

- Advertisement -

துவக்க வீரரான கெய்க்வாட் 14 ரன்களும், தவான் ரன் எதுவும் இன்றி ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த படிக்கல் 9 ரன்கள், சாம்சன் 0, நிதீஷ் ராணா 6 ரன்கள், புவனேஸ்வர் குமார் 16 ரன்கள், குல்தீப் யாதவ் 23 ரன்கள், ராகுல் சாகர் 5 ரன்கள், சக்கரவர்த்தி 0, சேத்தன் சக்காரியா 5 ரன்கள் என மொத்தம் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களை மட்டுமே குவித்தது.

இலங்கை அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 4 ஓவர்கள் வீசி 9 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பின்னர் 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி ஆனது 14.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றியது.

SL

அந்த அணியின் முன்னணி வீரரான தனஞ்ஜெயா டி சில்வா 23 ரன்களுடனும், ஹசரங்கா 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணியானது சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. அந்த சாதனை யாதெனில் கடந்த 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணிக்கு எதிரான தொடரை இலங்கை அணி தற்போது தான் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement