ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியானது நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. குரூப் பி பிரிவில் இடம் பெற்றிருந்த சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியும், லிட்டன் தாஸ் தலைமையிலான பங்களாதேஷ் அணியும் இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்தினர்.
சாதனையுடன் வெற்றி பெற்ற இலங்கை அணி :
அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய வங்கதேச அணி அணியானது இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே குவித்தது.
வங்கதேச அணி சார்பாக அதிகபட்சமாக ஷமீம் ஹுசைன் 42 ரன்களையும், ஜேகர் அலி 41 ரன்களையும் குவித்தனர். இலங்கை அணி சார்பாக வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். அதனை தொடர்ந்து 140 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது :
14.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 140 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் பதும் நிசாங்கா 50 ரன்களையும், கமில் மிஸ்ரா 46 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இலங்கை அணி மேலும் முன்னேற்றத்தை கண்டுள்ளது.
அதோடு இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் அவர்கள் சர்வதேச டி20 போட்டிகளில் அசத்தலான ஒரு சாதனையையும் நிகழ்த்தியுள்ளனர். அந்த வகையில் அவர்கள் நிகழ்த்திய சாதனை யாதெனில் : சர்வதேச டி20 போட்டிகளில் 140-க்கும் மேற்பட்ட ரன்களை வெகு விரைவாக துரத்தி அவர்கள் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
இதையும் படிங்க : ஸ்டார்க் மாதிரி அந்த திறமையும் கொண்ட அர்ஷ்தீப்பை அவருக்கு பதிலா விளையாட வைங்க.. அஸ்வின் விமர்சனம்
இந்த போட்டியில் 14.4 ஓவர்களில் 140 ரன்களை சேசிங் செய்ததன் மூலம் இலங்கை அணி சார்பாக குறைந்த ஓவர்களில் 140-க்கும் மேற்பட்ட ரன்களை எட்டிப் பிடித்த சேசிங்காக இந்த போட்டி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



