ஸ்டார்க் மாதிரி அந்த திறமையும் கொண்ட அர்ஷ்தீப்பை அவருக்கு பதிலா விளையாட வைங்க.. அஸ்வின் விமர்சனம்

R Ashwin
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியிலாவது 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றிய அர்ஷ்தீப் சிங் விளையாட வேண்டும் என்று ரவிசந்திரன் அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளார். இதுவரை இந்தியாவுக்காக 99 டி20 விக்கெட்டுகள் எடுத்துள்ள அர்ஷ்தீப் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இருப்பினும் பேட்டிங் ஆழத்தை அதிகப்படுத்துவதற்காக அவரைப் போன்ற தரமான பவுலரை கௌதம் கம்பீர் பெஞ்சில் அமர வைத்துள்ளார். உண்மையில் மிட்சேல் ஸ்டார்க், ரபாடா போல அர்ஷ்தீப் சிங்கும் ஓரளவு பேட்டிங் செய்யக்கூடியவர் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். எனவே சிவம் துபேவுக்கு பதிலாக அவர் விளையாடுவது அவசியம் என்று அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -

ஸ்டார்க், ரபாடா மாதிரி:

இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “சிவம் துபே உங்களுடைய 3வது வேகப்பந்து வீச்சாளராக இருப்பார் என்று உறுதியாக சொல்ல முடியாது. இது துபேவை பற்றியது கிடையாது. இது நம்முடைய பவுலிங் வரிசையில் தரத்தைப் பற்றியது. டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் வரிசையில் ஆழம் தேவை என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் மற்ற அணிகளைப் பாருங்கள். ஸ்டார்க், ரபாடா, ஆர்ச்சர், அடில் ரசித் ஆகியோரும் பேட்டை சுழற்றக் கூடியவர்கள்”

“உண்மையில் அந்த அணிகள் தங்களுடைய முதன்மை பவுலர்களின் பேட்டிங்கில் வேலை செய்துள்ளார்கள். ஆனால் இந்தியா மட்டுமே கொஞ்சம் பவுலிங் செய்யும் பேட்ஸ்மேன்களை தேர்ந்தெடுக்கின்றனர். தம்மால் பேட்டை விட முடியும் என்பதை அர்ஷ்தீப் சிங்கும் காண்பித்துள்ளார். பேட்டிங் பற்றிய நற்சான்றிதழ்களை கொண்டுள்ள அவரைப் போன்றவரின் திறமையில் வேலை செய்ய வேண்டும்”

- Advertisement -

அஸ்வின் ஆதரவு:

“அதை விட்டுவிட்டு அவரை பெஞ்சில் உட்கார வைத்து துபே போன்றவரை விளையாட வைக்கக்கூடாது. டி20 கிரிக்கெட்டில் நல்ல 4 ஓவர்கள் உங்களுக்கு தொடரை வென்று கொடுக்கும். ஓப்பனிங்கில் கில், 4வது இடத்தில் சூரியகுமார், 11வது பும்ரா விளையாடினால் ஏன் உங்களுடைய சிறந்த டி20 பவுலருக்கு இடமளிக்கக் கூடாது. இந்த விதிமுறைகள் பேட்ஸ்மேன்களுக்கு போல பவுலர்களுக்கு இருப்பதில்லை”

இதையும் படிங்க: ஆர்சிபிக்கு ஹெசன் செஞ்சது தெரியாதா? 35 வயசு அங்கிள்ஸை வீழ்த்திய பாகிஸ்தானை இந்தியா சாய்க்கும்.. ஸ்ரீகாந்த்

“பேட்டிங் செய்ய மாட்டார் என்பதை மட்டும் வைத்து ஏன் நீங்கள் அவருடைய தலைவிதியை எழுதுகிறீர்கள். இதை நம்முடைய பௌலிங் சமூகத்திற்கு நான் தெரிவிக்க விரும்புகிறேன். அதாவது நம்முடைய சமூகத்திற்குள் நாம் பெருமையைக் கொண்டிருக்கவில்லை எனில் யாரும் நம்மை தீவிரமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே நம்மை பெஞ்சில் அமர வைத்தால் அதற்காக நாம் கோபப்பட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement