மைதானத்தில் சிறுபிள்ளைத்தனமாக மோதிக்கொண்ட இலங்கை – வங்கதேசம் வீரர்கள் – வீடியோ

srilanka3

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிடாஸ் டி20 கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது.இலங்கை – வங்கதேச அணிகளிடையேயான கடைசி லீக் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாஸா மைதானத்தில் நடைபெற்றது.

bangla

இதில் 2விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்று வங்கதேச அணி நிடாஸ்கோப்பையின் இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.இலங்கை மண்ணில் நடைபெற்றுவரும் ஒருபோட்டியில் வங்கதேச அணி இலங்கையை இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாத இலங்கை வீரர்கள் வங்கதேச அணி வெற்றிபெற்ற பின் அவர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.

ஒருகட்டத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பாக உருவெடுக்க வங்கதேச வீரர்கள் உடனடியாக சுதாரித்துக்கொண்டு மைதானத்தில் நடக்கவிருந்த பெரும் அசம்பாவிதத்தினை தவிர்த்தனர்.இலங்கை வீரர்கள் மைதானத்தில் வைத்தே வங்கதேச வீரர்களை அடிக்க பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/Gods_Rule/status/974705354813538304