- Advertisement -
ஐ.பி.எல்

கே.கே.ஆர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரஹானேவை நீக்கிவிட்டு இவரை கேப்டன் ஆக்குங்க – ஸ்ரீகாந்த் கருத்து

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் போது ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. ஆனாலும் அந்த தொடர் முடிந்த கையோடு சாம்பியன் பட்டத்தை வென்ற கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரை வெளியேற்றிய கொல்கத்தா அணியின் நிர்வாகம் தங்களது புதிய கேப்டனாக கடந்த ஆண்டு அஜின்க்யா ரஹானேவை நியமித்தது நடப்புச் சாம்பியனாக 2025 ஐ.பி.எல் தொடரில் பங்கேற்றிருந்தது.

அஜின்க்யா ரஹானேவை சாடிய ஸ்ரீகாந்த் :

அப்படி விளையாடிய கே.கே.ஆர் அணி கடந்த 2025 ஆம் ஆண்டு படுமோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி எட்டாவது இடத்தை பிடித்து வெளியேறியிருந்தது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு மீண்டும் சிறப்பான கம்பேக் கொடுக்கும் வகையில் பல முக்கிய வீரர்களை கே.கே.ஆர் அணி தங்களது அணியில் சேர்த்து இருந்தாலும் இந்த ஆண்டும் அவர்களது செயல்பாடு மோசமாக இருந்து வருகிறது.

- Advertisement -

குறிப்பாக இந்த ஆண்டு நடைபெற்றுள்ள முதல் 5 போட்டிகளில் அவர்கள் நான்கு தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டதால் இதுவரை அவர்கள் ஒரு வெற்றி கூட பெறாத அணியாக இந்த சீசனில் இருந்து வருகின்றனர். இப்படி இந்த சீசனில் கே.கே.ஆர் அணி பெரிய சரிவை சந்தித்து வருவதற்கு காரணமே : சரியான வீரர்களின் காம்பினேஷன் இல்லாததும், கேப்டன் அஜின்க்யா ரஹானேவின் கேப்டன்சியும் தான் என பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன.

ஒரு பேட்ஸ்மேனாக ரகானே இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வந்தாலும் அவரது கேப்டன்சி கொல்கத்தா அணிக்கு செட்டாகாது என இந்திய அணியின் முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சில தகவல்களை வெளிப்படுத்தி உள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : என்னைப் பொறுத்தவரை ரகானேவிற்கு இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாய்ப்புகளை கேப்டனாக கொடுப்பேன். அதில் கொல்கத்தா அணி வெற்றி பெறவில்லை என்றால் நிச்சயம் சீசனின் நடுப்பகுதியில் அவரை நீக்கிவிட்டு சுனில் நரேனை கேப்டனாக நியமிப்பேன்.

- Advertisement -

இதையும் படிங்க : எம்.எஸ் தோனியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய குவிண்டன் டி காக் – விவரம் இதோ

ஏனெனில் ரஹானே பேட்ஸ்மேனாக மட்டுமே இருக்கட்டும். அவரை கேப்டனாக நியமித்ததே முதல் தவறு. அவரால் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய முடியாது. எனவே அவர் துவக்க வீரராக விளையாட வைத்துவிட்டு சுனில் நரேனை கேப்டனாக மாற்றலாம். தற்போதுள்ள கொல்கத்தா அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலுமே பலமான வீரர்கள் இல்லாததாலே அவர்கள் இந்த சரிவை சந்தித்துள்ளனர் என்று ஸ்ரீகாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -