இவர் மட்டும் செட் ஆகி அடிக்க ஆரம்பிச்சா அப்புறம் நிறுத்துறது ரொம்ப கஷ்டம் – ஸ்ரீகாந்த் புகழாரம்

Srikkanth
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக இங்கிலாந்து அணி வீரர்கள் முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் எடுத்தது பெரிய பாதகமாக அமைந்து விட்டது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா மற்றும் துணை கேப்டன் ரஹானே ஆகிய இருவரும் பெரிய அளவில் சொதப்பினர்.

rohith

- Advertisement -

அதிலும் ஐபிஎல் தொடரின்போது ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்ட ரோகித் சர்மா சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய தொடரிலும் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். அதனை தொடர்ந்து சென்னை டெஸ்டிலும் ரோகித் சர்மா இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதன் காரணமாக அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இது குறித்து “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” பத்திரிக்கைக்கு பேட்டியளித்த ஸ்ரீகாந்த் கூறுகையில் : ரோகித் சர்மா ஒரு டெஸ்ட் போட்டிக்காக தன்னுடைய இயல்பிலேயே இருக்கும் பேட்டிங் ஸ்டைலை மாற்ற கூடாது, ஏனெனில் அவர் ஒரு அனுபவம் மிக்க வீரர். தன்னுடைய வேலையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஒரு முறை அவர் ஆடுகளத்தில் பந்துகளை சந்தித்து நின்றுவிட்டால் போதும் பின்பு ரன்கள் தானாக வரும். ரோகித் விளையாடுவதை பார்ப்பதற்கு அவ்வளவு அருமையாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

Rohith 1

மேலும் ரோகிக் குறித்து கூறுகையில் : எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் ரோகித் ரன்களை மட்டும் குவிக்க தொடங்கி விட்டால் எதிரணியின் கேப்டனுக்கு பீல்டர்களை எவ்வாறு செட் செய்வது என்பது புரியாமல் போய்விடும். அந்த அளவிற்கு அவர் சிறப்பாக விளையாடக் கூடியவர். இங்கிலாந்து அணிக்கு எதிராக உடலை ஒட்டி வரும் பந்துகளை அடித்து விளையாட வேண்டும் என்று ம் வெளியே போகும் பந்துகளை அடிக்காமல் விட்டாலே அவர் சிறப்பாக விளையாட முடியும் என்ற ஒரு விடயத்தை மட்டும் அவர் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று ஸ்ரீகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனேகமாக 2வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்துவார் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்த கருத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. மேலும் சமீப காலமாக தொடர்ச்சியாக சொதப்பும் ரோகித் மீண்டும் பெரிய இன்னிங்ஸ்க்கு திரும்புவார் என்று அவரது ரசிகர்கள் இணையத்தில் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement