சி.எஸ்.கே அணியில் விஜய் ஷங்கர் இதுக்கு தான் லாயக்கி.. வேற எதுவும் இல்ல – சீக்கா ஸ்ரீகாந்த் கருத்து

Srikkanth and Vijay Shankar
- Advertisement -

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இந்த தொடரினை வெற்றிகரமாக ஆரம்பித்தது. ஆனாலும் அதற்கடுத்து நடைபெற்ற பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ச்சியாக நான்கு தோல்விகளை சந்தித்து பெரும் பின்னடைவை சந்தித்தது.

விஜய் ஷங்கரை கலாய்த்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் :

இப்படி முதல் 5 போட்டியிலேயே நான்கு தோல்வியை பெற்றதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். அப்படி முதல் 5 போட்டிகள் முடிந்த பின்னர் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறிய வேளையில் புதிய கேப்டனாக தோனியின் தலைமையில் தற்போது சென்னை அணி விளையாடி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் தோனியின் தலைமையில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்த சென்னை அணியானது லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. இதன் காரணமாக தற்போது ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த தொடரில் சிஎஸ்கே அணி சார்பாக இடம் பிடித்து விளையாடி வரும் தமிழக ஆல்ரவுண்டரான விஜய் சங்கரின் மோசமான செயல்பாடு பலரது மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இரண்டு முறை மட்டுமே இரட்டை இலக்க ரன்களை கடந்துள்ளார். இதன் காரணமாக அவரது இந்த மோசமான ஆட்டம் பலரது மத்தியிலும் விமர்சனத்தை பெற்று வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விஜய் சங்கர் தேவைதானா? என்கிற கேள்விக்கு சமூக வலைதளத்தின் மூலம் பதிலளித்த முன்னாள் இந்திய வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் : ஆம், மற்ற வீரர்களுக்கு குளிர்பானம் எடுத்து செல்வதற்கு விஜய் ஷங்கர் தேவை என்று மறைமுகமாக நக்கல் செய்து அவரது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார்.

இதையும் படிங்க : மும்பை வான்காடே மைதானத்தில் சச்சினுக்கு அடுத்து ரோஹித் சர்மாவுக்கு கிடைக்கவுள்ள கவுரவம் – விவரம் இதோ

அதேபோன்று அஸ்வினும் ஒரு சில ஆட்டங்கள் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டால் தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்று அவர் உணர்வார் என்றும் காட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் ராகுல் திரிப்பாதியை நீக்கிவிட்டு இளம் வீரர்களை சேர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement