கடந்த 2013-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி கிரிக்கெட் அணியானது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றிருந்தது. அதன்பின்னர் கடந்த பல ஆண்டுகளாகவே எந்த ஒரு ஐசிசி கோப்பையும் வெல்லாமல் இருந்த இந்திய அணியானது கடந்த 2024-ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை கைப்பற்றி 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு டி20 உலக கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருந்தது.
ரோஹித் சர்மாவுக்கு கிடைக்கவுள்ள கவுரவம் :
அதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் பங்கேற்று இந்த தொடரையும் கைப்பற்றிய அசத்தியது. இப்படி அடுத்தடுத்து இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய அணிக்கு பரிசுகளும் பாராட்டுக்களும் குவிந்து வந்தன. அதோடு அதற்கடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அடுத்த சுழற்சிக்கான கோப்பையையும் இந்திய அணி குறி வைத்துள்ளது.
ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விரைவில் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் அவர் தொடர்ந்து அணியில் நீடிப்பார் என பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாகவே ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாமல் தவித்து வந்த இந்திய அணிக்கு அடுத்தடுத்து இரண்டு ஐசிசி கோப்பைகளை பெற்று தந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை சிறப்பிக்கும் வகையில் தற்போது மும்பை கிரிக்கெட் வாரியம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த வகையில் மும்பை மாநில அணியில் இருந்து வந்து இந்திய அணிக்காக சாதித்த பல வீரர்களின் பெயரை மும்பை வான்கடே மைதானத்தின் ஸ்டாண்டுகளுக்கு பெயராக வைத்துள்ளனர். அந்த வகையில் ஏற்கனவே விஜய் மெர்சென்ட், திலீப் வெங்சர்க்கார், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்களின் பெயர்களை சில ஸ்டாண்டுகளுக்கு பெயராக வைத்துள்ளனர்.
இதையும் படிங்க : ஹார்ட் பீட் எகிறிடுச்சி.. எனக்கு 50 வயசு ஆகிடுச்சு.. இனிமே இதுமாதிரி மேட்ச் வேணாம் ப்ளீஸ் – ரிக்கி பாண்டிங் பேட்டி
அந்தப் பட்டியலில் தற்போது சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு 2 ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவின் பெயரையும் லெவல் 3 ஸ்டாண்ட் ஒன்றிற்கு வைக்க இருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் இந்த முடிவு உறுதி செய்யப்பட்டு ரோகித் சர்மாவின் பெயர் அதிகாரபூர்வமாக மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெறப்போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.