பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று சண்டிகர் நகரில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 31-வது லீக் போட்டியானது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. ஏனெனில் இந்த தொடர் ஆரம்பத்ததில் இருந்து ஒவ்வொரு அணியும் பெரிய ரன்களை அடித்து வெற்றிகளை பெற்று வந்த வேளையில் நேற்றைய போட்டி லோஸ்கோரிங் திரில்லராக அமைந்தது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.
இதுபோன்ற போட்டிகள் இனி வேண்டாம் : ரிக்கி பாண்டிங்
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் அணியானது கொல்கத்தா அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே குவித்தது.
பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்களையும், பிரியான்ஷ் ஆர்யா 22 ரன்களையும் குவித்தனர். பின்னர் 112 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதாக இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி சீக்கிரமே வெற்றி பெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பஞ்சாப் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 15.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்களை மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக 16 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்த போட்டியின் போது பஞ்சாப் அணி சார்பாக மிகச் சிறப்பாக பந்துவீசியிருந்த யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற திரில் வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில் :
என்னுடைய ஹார்ட் பீட் ரேட் இப்பொழுதும் அதிகமாக இருக்கிறது. தற்போது எனக்கு 50 வயது ஆகிறது. எனவே இது போன்ற போட்டிகள் இனி வேண்டாம் என்று நினைக்கிறேன். 112 ரன்களை வைத்து போட்டியை வெற்றிகரமாக முடித்ததில் மகிழ்ச்சி. அதிலும் 16 ரன்கள் வித்தியாசத்தில் நாங்கள் பெற்றது மிகச் சிறப்பான வெற்றி என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : அதுக்காக 150 பேர் காத்திருந்தாங்க.. இந்தியாவை விட ஆர்சிபி வேற லெவல்.. சாதாரண டீம்ல இல்ல.. ஜிதேஷ் பேட்டி
நான் ஐபிஎல் போட்டிகளில் பயிற்சியாளராக பல்வேறு போட்டிகளில் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் இது போன்ற ஒரு வெற்றியை நான் எப்போதுமே பெற்றது கிடையாது. அந்த அளவிற்கு இந்த போட்டி ஒரு விறுவிறுப்பான போட்டியாக இருந்தது என பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.