அதுக்காக 150 பேர் காத்திருந்தாங்க.. இந்தியாவை விட ஆர்சிபி வேற லெவல்.. சாதாரண டீம்ல இல்ல.. ஜிதேஷ் பேட்டி

Jitesh Sharma
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ரஜத் படிதார் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது. அவரது தலைமையில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய பெங்களூரு 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது. முன்னதாக பெங்களூரு அணிக்காக விக்கெட் கீப்பராக விளையாடி வந்த தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் கடந்த வருடத்துடன் ஓய்வு பெற்றார்.

அவருக்கு பதிலாக இந்த வருடம் பெங்களூரு அணிக்காக விக்கெட் கீப்பராக விளையாட ஜிதேஷ் சர்மா 11 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வருடங்களாக பஞ்சாப் அணிக்காக விக்கெட் கீப்பராக அசத்திய அவர் இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வகையில் நம்பிக்கை தரும் செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் தற்போது அவரை பெங்களூரு அணி நிர்வாகம் வாங்கியுள்ளது.

- Advertisement -

இந்தியாவை விட பெஸ்ட்:

அந்த வாய்ப்பில் இதுவரை அவர் 6 போட்டிகளில் 88 ரன்களை 154.39 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக வாங்கப்பட்ட பின் உள்ளூரில் விளையாடும் போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆர்சிபி என்று கூச்சலிட்டு தமக்கு ஆதரவு கொடுத்ததாக ஜிதேஷ் கூறியுள்ளார். அத்துடன் ஏராளமான ஆர்சிபி ரசிகர்கள் தமக்காக ஆட்டோகிராப் வாங்குவதற்கு காத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இந்தியாவுக்காக விளையாடும் போது 5 ரசிகர்கள் கூட தம்மிடம் ஆட்டோகிராப் வாங்கியதில்லை என்றும் ஜித்தேஷ் தெரிவித்துள்ளார். அந்த வகையில் ஆதரவுக் கொடுப்பதில் இந்தியாவை விட ஆர்சிபி அணி ரசிகர்கள் வேற லெவலில் இருப்பதாகவும் ஜிதேஷ் கூறியுள்ளார். இது பற்றி ஆர்சிபி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஆர்சிபி ரசிகர்கள் பெஸ்ட்:

“சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் நான் என்னுடைய மாநில அனிக்காக விளையாடிக் கொண்டிருந்த போது ரசிகர்கள் “ஜிதேஷ் ஜிதேஷ், ஆர்சிபி ஆர்சிபி” என்று கூச்சலிட்டு ஆதரவு கொடுத்தனர். அப்போது தான் ஒரு சாதாரணமான சிறிய அணிக்காக நான் ஐபிஎல் தொடரில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை உணர்ந்தேன்”

இதையும் படிங்க: மஹி பாய் தான்.. பிஸ்னோய்க்கு ரிஷப் பண்ட் ஓவரை கொடுக்க விடாம செஞ்சாரு.. மாஸ்டர்மைண்ட் பற்றி துபே பேட்டி

“அது போக 150 ரசிகர்கள் என்னுடைய ஆட்டோகிராப் வாங்குவதற்காக காத்திருந்தார்கள். அதற்கு முன்பாக நான் இந்தியாவுக்காகவும் விளையாடியுள்ளேன். ஆனால் இந்திய அணிக்காக விளையாடும் போது 2 – 3 ரசிகர்கள் கூட எனது ஃஆட்டோகிராபை வாங்க வந்திருக்க மாட்டார்கள்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து பெங்களூரு அணி தங்களது அடுத்தப் போட்டியில் பஞ்சாப் அணியை சின்னசாமி மைதானத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement