IND vs WI : அந்த பையனை ஏன் பிளேயிங் லெவன்ல எடுக்கல. இந்திய அணியின் தேர்வை விளாசிய – ஸ்ரீகாந்த்

Srikkanth
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரில் ஓய்வில் இருந்த இந்திய அணியின் சீனியர் வீரர்கள் தற்போது டி20 தொடருக்கான அணிக்கு திரும்பியுள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

INDvsWI

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது இன்று டிரினிடாட் நகரில் உள்ள பிரைன் லாரா மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியானது 68 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டிருந்த நிலையில் இன்றைய போட்டிக்கான அணியில் அர்ஷ்தீப் சிங் மீண்டும் இடம் பிடித்தது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது பலரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

Deepak Hooda

அந்த வகையில் சமீபத்தில் இந்திய அணிக்காக அறிமுகமாகிய தீபக் ஹூடா தனக்கு கிடைத்த வாய்ப்புகலை எல்லாம் சரியாக பயன்படுத்திய வேளையில் அவருக்கு இந்த டி20 தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழக கிரிக்கெட்டருமான ஸ்ரீகாந்த் தனது கோபத்தினை வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணிக்காக டி20 போட்டிகள் மட்டுமின்றி ஒருநாள் போட்டிகள் என அனைத்திலும் தீபக் ஹூடா தான் பங்கேற்ற போட்டிகளில் எல்லாம் பேட்டிங் மற்றும் பவுலிங் என இந்திய அணிக்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார்.

இதையும் படிங்க : நான் சொல்ற இந்த விஷயத்தை பத்தி கோலி கொஞ்சமும் கவலைப்பட மாட்டார் – அப்ரிடி வெளிப்படை

இப்படி அவரது பங்களிப்பை முழுமையாக இந்திய அணிக்கு வழங்கி வரும் வேளையில் அவருக்கு இந்த டி20 போட்டிக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது சரியானது இல்லை அவரது நீக்கம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம் என தமிழக வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement