நான் சொல்ற இந்த விஷயத்தை பத்தி கோலி கொஞ்சமும் கவலைப்பட மாட்டார் – அப்ரிடி வெளிப்படை

Afridi
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி கடந்த பல தொடர்களாகவே பேட்டிங்கில் பெரிய அளவு சறுக்கலை சந்தித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற முடிந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது கூட ஒரு டெஸ்ட், 3 டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய விராட் கோலி எந்த ஒரு போட்டியிலும் 20 ரன்கள் கூட தாண்டவில்லை.

Kohli

- Advertisement -

இதன் காரணமாக அவர் மீது தற்போது அழுத்தமும் அதிகரித்த வேளையில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் அவருக்கு ஓய்வும் அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து விராட் கோலி குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை சமூகவலைதளத்தின் வாயிலாக பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான அணியில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டது குறித்தும் கோலியின் பேட்டிங் தடுமாற்றம் குறித்தும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான அப்ரிடியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அப்ரிடி கூறுகையில் :

Virat kohli Shubman Gill

ஜிம்பாவே அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மீண்டும் இந்திய அணிக்கு விராட் கோலி வருவார். நீண்ட நாட்களாக ரன் குவிக்க தடுமாறி வரும் அவர் தரத்திற்கு ஏற்ற அளவு விளையாடவில்லை. அதே சமயம் எனது ஆலோசனைகளை பற்றி எல்லாம் அவர் ஏன் கவலைப்பட வேண்டும்.

- Advertisement -

அவரிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் அவர் சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது என்று அப்ரிடி கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்த ஆண்டு இறுதியில் ஆசியக் கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்து பேசுகையில் :

இதையும் படிங்க : IND vs WI : முதல் டி20 போட்டியில் வித்தியாசமான முடிவை கையில் எடுத்த ரோஹித் சர்மா – விவரம் இதோ

பாகிஸ்தான அணியை பொறுத்தவரை தற்போது சமநிலையான அணி உள்ளது என்றும் ஆசிய கோப்பை மட்டுமல்ல டி20 உலக கோப்பையிலும் எங்களது அணி மிகச் சிறப்பாக விளையாடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement